ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜியின் ராஜதந்திரம்... அடிச்சு தூக்கும் அதிமுக... அலறும் திமுக..!

By vinoth kumarFirst Published Apr 4, 2021, 5:43 PM IST
Highlights

சிவகாசி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் தொகுதியை மாற்றி ராஜபாளையத்தில் களம் இறங்கியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி உள்ளதாக களநிலவரம் தெரிவிக்கிறது. 

சிவகாசி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் தொகுதியை மாற்றி ராஜபாளையத்தில் களம் இறங்கியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி உள்ளதாக களநிலவரம் தெரிவிக்கிறது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அமைச்சர்களில் மிகவும் அதிரடியாக பேசுபவர் ராஜேந்திர பாலாஜி. எவ்வித தயக்கமும் இல்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் வசைபாடக்கூடிய அளவிற்கு துணிச்சலுடன் பேசி வந்தார் இவர். இதனால் சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜியை தோற்கடிக்க கடந்த வருடம் முதலே திமுக தேர்தல் பணிகளை துவங்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சிவகாசி தொகுதியை காலி செய்துவிட்டு போட்டியிடாமல் ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக ராஜேந்திர பாலாஜி களத்தில் இறங்கியுள்ளார். 

அதேபோல், ராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை களம் இறக்கி வெற்றி பெற்ற தங்கபாண்டியன் மறுபடியும் வேட்பாளராகியுள்ளார். சிட்டிங் எம்எல்ஏ என்பதால் தொகுதியில் நல்ல பெயர் உள்ளது. ஆனால் எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்த காரணத்தினால் கடந்தமுறை தங்கபாண்டியன் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை. 

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று 7 மணியுடன் நிறைவடைவதால் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மீண்டும் ஆட்சிக்கு யார் வருவார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க நட்சத்திர தொகுதியான இராஜபாளையம் தொகுதியில் இரவோடு இரவாக அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், திமுக சார்பில் தங்கபாண்டியனும் போட்டியிடுக்கின்றனர். இந்த தொகுதி குறித்து வெளியான பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகளில் கடும் போட்டி நிலவுவதாகவே கூறப்பட்டு வருகிறது. 

ஆனால் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாக முழுமையாக களத்தில் இறங்கி புதுப்புது யுக்தியை கையாண்டு வருகிறார். அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தான் வெற்றி பெற்றால்  அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதிமுகவினர் செல்லாத இடங்களே தொகுதியில் இல்லை என்ற நிலை கடந்த 3  நாட்களில் அரங்கேறியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2  நாட்களே மீதமுள்ள நிலையில் திமுகவினர் தோல்வியை ஒப்புக்கொண்டது போல வீட்டில் முடங்கி இருப்பது. அதிமுகவின் வெற்றியை ராஜபாளையத்தில் மீண்டும் அரங்கேற உறுதுணையாக அமைந்துள்ளது. அமைச்சர் தொகுதி என்பதால் வெற்றி பெற்றால் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. 

click me!