லீக்கான ஐ-பேக்கின் ரகசிய மெயில்.. ஸ்டாலினுக்கு எழுதிய மெயிலில் ஆ.ராசாவால் தோல்வி என பதிவு..!

Published : Apr 04, 2021, 04:54 PM IST
லீக்கான ஐ-பேக்கின் ரகசிய மெயில்.. ஸ்டாலினுக்கு எழுதிய மெயிலில் ஆ.ராசாவால் தோல்வி என பதிவு..!

சுருக்கம்

முதலமைச்சரின் தாயாரை தரக்குறைவாக அ. ராசா பேசியதை அடுத்து, பெண்கள் வாக்குகள் திமுகவிற்கு எதிராக செல்வதாகவும், இதனால் திமுக தோல்வியை சந்திக்கும் என சர்வே முடிவுகள் தெரிவிப்பதாகவும் திமுகவின் தேர்தல் வியூகத்தை வகுத்திடும் ஐ-பேக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஸ்டாலினுக்கு ரகசிய கடிதம் எழுதியுள்ளார். இந்த ரகசிய கடிதம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முதலமைச்சரின் தாயாரை தரக்குறைவாக அ.ராசா பேசியதை அடுத்து, பெண்கள் வாக்குகள் திமுகவிற்கு எதிராக செல்வதாகவும், இதனால் திமுக தோல்வியை சந்திக்கும் என சர்வே முடிவுகள் தெரிவிப்பதாகவும் திமுகவின் தேர்தல் வியூகத்தை வகுத்திடும் ஐ-பேக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஸ்டாலினுக்கு ரகசிய கடிதம் எழுதியுள்ளார். இந்த ரகசிய கடிதம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தேர்தல் பிரச்சாரத்தின் போது அ. ராசா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை கொச்சை படுத்தும் விதத்தில் விமர்சனம் செய்தார். இது பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அ. ராசாவின் பேச்சு திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால், தேர்தலில் திமுக தோற்கும் நிலையில் உள்ளதாகவும் ஆகவே உடனடியாக அ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவிற்கு தேர்தல் வியூகத்தை வகுத்து கொடுக்கும் ஐ-பேக் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான அனந்த் திவாரி ஐ-பேக் சார்பில் ஸ்டாலினுக்கு ரகசிய கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ரகசிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இக்கடிதத்தில், ஐ-பேக் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட சர்வேயில் பெண்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரியவந்துள்ளதாகவும், திமுக தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சினால், கருத்து கணிப்புகளை திமுகவிற்கு சாதகமாக வெளியிடுவதற்கு ஐ-பேக் நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகள் வீணாகிப் போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஷாந்த் கிசோர் இது குறித்து தன்னிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் விவாதித்ததாகவும், நெருக்கமான இடத்திலிருந்து தேர்தல் களம் தற்போது அதிமுக வசம் சென்றுள்ளதாகவும் அந்த இ-மெயிலில் அனந்த் திவாரி குறிப்பிட்டுள்ளார்.  

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள திமுகவின் எதிரான மனநிலையை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்று சிலவற்றை அனந்த் திவாரி ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில், அ.ராசா உடனடியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை கூட்டி முதலமைச்சரிடம் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். பெண்கள் மற்றும் திமுக மகளிர் அணியின் கோபத்தை தணித்திடும் வகையில் அ.ராசா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல், தேர்தல் பிரச்சாரங்களில் அ.ராசா ஈடுபட கூடாது என்று உத்தரவிட வேண்டும். பிரசாரங்களில் ஈடுபடுவோர், வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும், திமுக ஆட்சியில் பெண்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து கூற வேண்டும் என்று அனந்த் திவாரி பரிந்துரை செய்துள்ளார். 

ஐ-பேக் நிறுவனத்தின் அனந்த் திவாரி பரிந்துரை செய்தபடி அ.ராசா பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஊட்டியில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், பரப்புரையில் திமுகவினர் “உணர்ச்சிவசப்பட்டு கண்ணியக் குறைவான பேச்சுக்களை பேசக்கூடாது” என்று ஸ்டாலின் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

திமுக தலைமை இரவல் மூளையான ஐ-பேக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்து வந்த நிலையில் இந்த ரகசிய கடிதம் இதை உறுதியாக்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Annamalai Goes Viral: "வீடியோ எடுக்காதீங்க... வேலை செய்யுங்கள்!" – வைகை கரையில் அண்ணாமலை வைரல்
Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!