'ஓட்டு பெட்டிக்குள்ள என்ன இருக்கு' மண்டையே பீய்த்து கொள்ளும் மதுரை வேட்பாளர்... குதர்க்கமா கேள்விக்கேட்க்கும் ராஜன் செல்லப்பா சன்!?

By Asianet TamilFirst Published May 14, 2019, 10:38 AM IST
Highlights

முதல்வர் எனக்காக கொடுத்த சீட்டு அதுபோக நான் மதுரையில தோத்து போய்யிட்டா எங்கப்பாவோட அரசியல் வாழ்க்கைகே அது கேள்விகுறியா போயிடும் என ராஜன் செல்லப்பா மகன் புலம்பித தவிக்கிறாராம். 

முதல்வர் எனக்காக கொடுத்த சீட்டு அதுபோக நான் மதுரையில தோத்து போய்யிட்டா எங்கப்பாவோட அரசியல் வாழ்க்கைகே அது கேள்விகுறியா போயிடும் என ராஜன் செல்லப்பா மகன் புலம்பித தவிக்கிறாராம். 

தேர்தல் முடிவுக்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் உறக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள். அதிலும் மதுரை மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யன் சற்று அதிகமாகவே தவிக்கிறார்.மதுரை தொகுதியை பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவினாலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர் வெங்கடேசனுக்கும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மகனும்,மதுரை லோக்சபா அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யனுக்கும்தான் போட்டி நிலவுகிறது. 

அதி.மு.க தலைமை லோக்சபா தேர்தலுக்காக வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது கடைசி நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆசியால்  அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்தவர்தான் இந்த ராஜ்சத்யன். இவர் சீட் வாங்கியதால் மதுரையிலுள்ள இரு அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமாருக்கும், செல்லூர் ராஜீவுக்கும் மனகசப்பு ஏற்பட்டது. ஆனாலும் தனது தந்தை ராஜன் செல்லப்பாவின்  அரசியல் அனுபவத்தை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். 

பிரச்சாரம் தொடங்கிய ஆரம்பத்தில் ராஜ்சத்யனுக்கு வரவேற்பு இருந்தாலும் இவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேஷன் எழுத்தாளாராகவும் ஒரு நடுநிலையான கேன்டிடேட் ஆக இருந்ததால் தூங்கா நகர மக்களிடம் ஆதரவு பெருகியது. இதை பார்த்த அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யன் தன் ஆதரவாளர்களிடம்  "முதல்வர் எனக்காக கொடுத்த சீட்டு அதுபோக நான் மதுரையில தோத்து போய்யிட்டா எங்கப்பாவோட அரசியல் வாழ்க்கைகே அது கேள்விகுறியா போயிடும்"என புலம்பினார். 

இப்போது லோக்சபா வாக்குபதிவு முடிந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு ஓட்டு மெஷின்களை கொண்டு சென்றாகிவிட்டது. இதற்கிடையில் ஓட்டு பெட்டியை மாற்ற ஆளும்கட்சி முயற்சிக்கிறது என்ற பிரச்சனை எதிர்தரப்பினரால் வெடித்து பூதாகரமானது. ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாத மதுரை அ.தி.மு.க வேட்பாளர் ராஜ்சத்யன் ஓட்டு எண்ணும் இடத்தில் இருக்கும் தனது கட்சி ஆதரவாளர்களிடம் 'அப்படி என்னதான்யா ஓட்டுபெட்டிகுள்ள இருக்கு. நான் ஜெயிச்சு எம்.பி ஆகிடுவேன்ல' என நச்சரிக்கிறாராம். இதை கேட்கும் வாக்கு எண்ணும் இடத்தில் இருக்கும் அ.தி.மு.க ர.ரக்கள் 23-ம் தேதி தான் நீங்கள் எம்.பி ஆகிவிடுவாரா? மாட்டாரா? எல்லாமே தெரிந்துவிடும் அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என ராஜ்சத்யன் மனதைத் தேற்றி கொண்டு இருக்கிறார்களாம். 

click me!