இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.லாம் ஒரு ஆளே கிடையாது..! நான் அம்மா காலத்துலேயே அப்படியாக்கும்... கன்னாபின்னான்னு கெத்துவிட்ட கண்ணப்பன்..!

By Vishnu PriyaFirst Published Apr 4, 2019, 5:49 PM IST
Highlights

ஜெயலலிதாவின் கொஞ்சம் பழைய ஆட்சியில் பட்டையை கெளப்பிய அமைச்சர்களில் முக்கியமானவர் ராஜகண்ணப்பன். சிவகங்கை சீமைக்காரரான இவரது தேஜஸுக்கும், செல்வாக்குக்கும் கோடம்பாக்கத்து ஆளுங்களே சொக்கிக் கிடந்த காலமெல்லாம் உண்டு. 

ஜெயலலிதாவின் கொஞ்சம் பழைய ஆட்சியில் பட்டையை கெளப்பிய அமைச்சர்களில் முக்கியமானவர் ராஜகண்ணப்பன். சிவகங்கை சீமைக்காரரான இவரது தேஜஸுக்கும், செல்வாக்குக்கும் கோடம்பாக்கத்து ஆளுங்களே சொக்கிக் கிடந்த காலமெல்லாம் உண்டு. 

அப்பேர்ப்பட்ட ரா.க. அதன் பின் ஜெயலலிதாவின் குட்புக்கிலிருந்து தூக்கிவீசப்பட்டதோடு, அ.தி.மு.க.வில் கடுமையாய் ஓரங்கட்டப்பட்டார். தன் செல்வாக்குக்கு இப்படி செல்லாக்காசாக இருப்பது சரியில்லை! என்பதால் கட்சியிலிருந்து விலகியவர் தனி அமைப்பு துவக்கினார். ஆனால் பப்பு வேகவில்லை. பின் சில வருடங்களுக்கு முன் மீண்டும் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.விலேயே இணைந்தார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் இவருக்கு சீட் தரப்பட்டது, எதிர்த்து நின்றவர் ப.சிதம்பரம். அந்த தேர்தலின் முடிவில் ஏற்பட்ட விவகாரத்தால்தான் இன்றும் மோடியிடம் ‘ரீ கவுண்டிங் மினிஸ்டர்’ என்று  தாறுமாறாக கிண்டலுக்கு ஆளாகிறார் ப.சிதம்பரம். 

சரி விஷயத்துக்கு வருவோம்...இப்பேர்ப்பட்ட ராஜகண்ணப்பன் ஜெ., மரணத்துக்கு பின் அ.தி.மு.க.வில் தனி மேலெழும்பி வர முயன்றார் ஆனால் தடுக்கப்பட்டார். சரி தேர்தலிலாவது சீட் கிடைக்குமென ரொம்பவே பிரயத்னப்பட்டார். ஆனால் அல்வாவே மிச்சம். இதனால் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். இந்த சூழலில் தன் அதிரடி முடிவையும், அ.தி.மு.க.வின் இரு ஒருங்கிணைப்பாளர்களையும் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கும் ராஜகண்ணப்பன்...”அ.தி.மு.க.வுக்கு தென் தமிழகத்தில் அப்படியொரு செல்வாக்கு இருந்தது. ஆனால் இந்த பகுதிகளில் பனிரெண்டு சீட்களை கூட்டணிக்கு விட்டுக் கொடுத்துவிட்டனர். இதனால் தொண்டர்கள் ஏமாந்து கிடக்கின்றனர். 

நான் ஜெயலலிதா காலத்து ஆளுங்க. அப்போவே அம்மாட்ட நியாயம் பேசியவன். இந்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ். நினைச்சுல்லாம் என்னை ஓரங்கட்ட முடியாது. கன்னியாகுமரி முதல் கிருஷ்ணகிரி வரை மக்களை சந்திச்சு எழுச்சியை உருவாக்கிடுவேன். எனக்கு பேக் கிரவுண்ட் இருக்குது, அது இல்லாதவங்கதான் மைதியா கெடப்பாங்க. இந்த ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு குடும்ப அரசியல் நடத்திட்டிருக்காங்க. ஓ.பி.எஸ். தன் மகனுக்கு சீட் வாங்கிக் கொடுத்துட்டு அமைதியாகிட்டார், இ.பி.எஸ்.ஸோ கொங்கு மண்டலத்துல கை நிறைய சீட்களை அள்ளிட்டு, கண்டுக்காம விட்டுட்டார். 

இப்ப சொல்றேன் கேட்டுக்குங்க...குறைஞ்சது முப்பது தொகுதிகளில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்குகள் வாங்கி தர முடியும் கணிசமா. குறைந்தது ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரைக்கும் வாங்கி தருவேன். யாதவ வாக்கு மட்டுமில்லை, எல்லா சமுதாய வாக்குகளையும் வாங்கி தருவேன். தலைவர், தலைவி காலத்துல இருந்த அ.தி.மு.க.வுக்கான செல்வாக்கில் குறைந்த சதவீத செல்வாக்கு கூட இப்போதைய கழகத்துக்கு இல்லை.

முக்கிய காரணம் இவங்க ரெண்டு பேரு. இதுபோக தினகரன் வேற ஒரு பக்கம் பிரிச்சுட்டு போயிட்டாரு அந்த கட்சியின் வாக்கு வங்கியை. அந்த கட்சிக்கு ஆளுமையான தலைவர்கள் இல்லை. நிதி இருக்குது ஆனால் நீதி இல்லை. அவங்க கட்சியை நம்பியோ, தொண்டர்களை நம்பியோ தேர்த்லைல் இறங்கலை, மோடியை நம்பித்தான் கட்சி நடத்துறாங்க. விளங்குமா இது?” என்று போட்டுப் பொளந்துவிட்டார். கெத்துதான்!

click me!