பெட்ரோல் விலையை 200 சதவீதம் உயர்த்திவிட்டு சொற்ப அளவில் குறைப்பதா.? மோடி அரசை விளாசிய திருமாவளவன்!

By Asianet TamilFirst Published May 25, 2022, 9:25 PM IST
Highlights

மத்திய அரசுதான் கலால் வரியை வசூலிக்கிறது. மத்திய அரசு 200 சதவீதம் உயர்த்திவிட்டு சொற்ப அளவில் விலையைக் குறைத்து விட்டு பெட்ரோல், டீசல் விலை குறைத்துவிட்டதாக மக்களை பாஜக ஏமாற்றுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் நினைவாக தமிழக அரசு நினைவு தூண் அமைக்க வேண்டும். சிபிஐ விசாரணை அறிக்கை மக்களுக்கு நிதி வழங்காது. எனவே தமிழக அரசு மீண்டும் அதை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும். மே 25 முதல்31 வரை மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வ்வை கண்டித்தும் வேலைவாய்ப்பு நெருக்கடியை அம்பலப்படுத்தும் வகையிலும் இடதுசாரிகளுடன் சேர்ந்து ஒரு வாரத்துக்கு பரப்புரை நடத்த உள்ளோம். இதில், மே 27 சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள் இருக்கிறோம்.

தமிழகத்தில் அரசியல் செய்வதற்கான களத்தை பாஜக தேடிக்கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையேற்றத்துக்கு முழு பொறுப்பு மத்திய அரசுதான். மத்திய அரசுதான் கலால் வரியை வசூலிக்கிறது. மத்திய அரசு 200 சதவீதம் உயர்த்திவிட்டு சொற்ப அளவில் விலையைக் குறைத்து விட்டு பெட்ரோல், டீசல் விலை குறைத்துவிட்டதாக மக்களை பாஜக ஏமாற்றுகிறது. தமிழக அரசு 3 ரூபாய் வரை வரியைக் குறைத்திருக்கிறது. பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. வெளி நாடுகளில் பதுக்கி வைத்த பணத்தை மக்களுக்கு கொடுப்பதாக சொன்னார் மோடி. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. 

கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெறவே மோடி அரசு பொருளாதார கொள்கையை வகுக்கிறது. 8 ஆண்டு கால ஆட்சியில் அதானியை வளர்த்ததுதான் மோடி அரசின் சாதனை. எந்த நாட்டிலும் இருந்து அந்நிய முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அமையாது. மோடியின் நண்பர்களுக்குதான் அது பயன் தரும். நெல்லை கல்குவாரியில் உயிரிழந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும். சட்டவிரோதமாக கல்குவாரி ஆழம் தோண்டப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆகவே புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

click me!