தமிழக பாஜக தலைவர் உயிருக்கு ஆபத்து? வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி!!

Published : May 25, 2022, 07:58 PM IST
தமிழக பாஜக தலைவர் உயிருக்கு ஆபத்து? வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி!!

சுருக்கம்

மாநிலத்தின் தலைநகரிலே ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது என்பது, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளதை காட்டுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

மாநிலத்தின் தலைநகரிலே ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது என்பது, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளதை காட்டுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து தங்களது வரி வருவாயை குறைத்தது போல், மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். மக்களுக்காக தங்களது வரிவருவாயை மத்திய அரசு குறைத்து போல், மாநில அரசும் மக்களுக்காக வரிவருவாயை குறைத்து கொள்வதில் தவறில்லை. மேலும் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது என்று தமிழக முதல்வர் பிடிவாத பிடித்து வருகிறார்.

மாநில அரசு தங்களது வரி வருவாயை குறைக்காமல் மத்திய அரசை குறை கூறி வருவதில் எந்த நியாமுமில்லை. அதேபோல் மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அரசியல் ஆதயாத்திற்க்காக கூட்டாச்சி தத்துவம் குறித்து மாநில அரசு தவறாக, பொதுமக்களிடம் பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. தனிப்பட்ட ஆதயத்திற்காக மோடி அரசை எதிர்க்கிறது. கொரோனாவல் தொழில் முடங்கினாலும் வரி வருவாயை அதிகரித்து மாநில அரசுக்கு நிதியை, மத்திய அரசு வழங்கி வருகிறது என்று தெரிவித்தார்.

சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து பேசிய வானதி சீனிவாசன், மாநிலத்தின் தலைநகரிலே ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது என்பது, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளதை காட்டுகிறது. அதேபோல் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மிரட்டல் அதிகரித்து வருகிறது. திமுகவின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ஊடகங்களை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்கிற போக்கு தற்போது திமுக விற்கு வந்துள்ளது. ஏன் திமுக விற்கு வாக்களித்தோம் என மக்கள் நினைக்கின்றனர் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை