
ஆண்டுதோறும், எர்பல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதாவது 1948 ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தை கடை பிடிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்தினத்தன்று, எதாவது ஒரு டாபிக் பற்றி பேசுவது உண்டு. இந்நிலையில், இந்த ஆண்டு மன அழுத்தம் என்ற தலைப்பில் பல கருத்துக்களை முன்வைக்கப்படுகிறது.உலக அளவில் 32 கோடி பெற மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் , அதில் இந்தியாவில் மட்டும் 5 கோடி பெற மன அழுத்தத்தால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது .
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், உலக சுகாதாரத்தினமான இன்று, தமிழ் நாட்டில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இன்று காலை 6 மணி முதல் தொடங்கிய சோதனை , தொடர்ந்து நடை பெற்று வருகிறது .
.சென்னை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் , கல்குவாரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .
திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில், உலக சுகாதார தினமான இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது