மதசார்பின்மை, சோஷியலிசம், கூட்டாட்சியை மீட்டெடுப்பார்...! - ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்...

Asianet News Tamil  
Published : Dec 16, 2017, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
மதசார்பின்மை, சோஷியலிசம், கூட்டாட்சியை மீட்டெடுப்பார்...! - ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்...

சுருக்கம்

Rahul to restore the pride of secularism socialism and federalism

இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு திமுக சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என்றும் மதச்சார்பின்மை, சோஷியலிசம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் பெருமைகளை மீட்டெடுப்பார் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒரு தேர்தலை அறிவித்தார்கள். ஆனால், அதில் ராகுலைத் தவிர வேறூ எவரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. எனவே போட்டியின்றி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் ராகுல். அவர் இன்று தலைவராக முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார். 

காங்கிரஸ் கட்சியின்  தலைவராகப் பொறுப்பேற்றதற்கு ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய சோனியா காந்தி,  காங்கிரஸ் கட்சி புதிய திசையை நோக்கி பயணிப்பதாகக் கூறினார். 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்று கொண்ட ராகுல் காந்தியை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிலையில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு திமுக சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என்றும் மதச்சார்பின்மை, சோஷியலிசம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் பெருமைகளை மீட்டெடுப்பார் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். 
 
PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!