ராகுல் தேர்தெடுத்த "ஒன்லி 3 டாபிக்"..! கூடவே ஆப்ஷனும் கொடுத்து அதிரடி..!

Published : Apr 09, 2019, 04:56 PM ISTUpdated : Apr 09, 2019, 04:58 PM IST
ராகுல் தேர்தெடுத்த "ஒன்லி 3 டாபிக்"..! கூடவே ஆப்ஷனும் கொடுத்து அதிரடி..!

சுருக்கம்

ஊழல் பற்றி விவாதம் செய்ய பயமாக உள்ளதா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊழல் பற்றி விவாதம் செய்ய பயமாக உள்ளதா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் டியர் பிஎம், ஊழலைப் பற்றி தன்னுடன் விவாதிக்க உங்களுக்கு பயமாக உள்ளதா? உங்களுக்கு நானே சிறந்த வழியை சொல்கிறேன்.

ரஃபேல் 
நீரவ் மோடி 
அமீஷா என பதிவிட்டு இந்த மூன்று விவகாரங்களை பற்றி பேச தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இரு பெரும் தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் மாறிமாறி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் சூடுபிடிக்கும் பிரச்சாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை இவ்விரு கட்சிகளும் முன்வைத்து வருகின்றனர்.

மோடி பிரசாரம் மேற்கொள்ளும் எந்த இடத்திலும் காங்கிரஸ் ஆட்சியின் போதான ஊழல் பற்றி துல்லியமாக பல பாயிண்டை பிடித்து கேள்வி எழுப்புகிறார். அதன்படி இன்று கூட பாகிஸ்தான் என்ற நாடு உருவானதற்கு காங்கிரஸ்தான் காரணம் என குற்றம் சாட்டி இருந்தார்.இந்நிலையில் மோடிக்கு கேள்வியை எழுப்பும் வண்ணமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி இவ்வாறு ஊழல் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பி அதற்காக 3 எடுத்துக்காட்டையும் கொடுத்துள்ளார். 

இதனை உற்று நோக்கும் அரசியல் கட்சியினர் பாஜக விற்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள மிக முக்கிய மூன்று விஷயமாக ரபேல் ஊழல் விவகாரம், நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் அமித்ஷாவைன் பங்கு மற்றும் அவருடைய சொத்து மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்துள்ளது என்பதை உணர வைப்பதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

காங்கிரஸ் வந்தாலும் வேண்டாம்.. ஜாதி, ஊழல் கட்சிகளும் வேண்டாம்... விஜய் எடுக்கும் புது ரூட்..!
இதைக்கூட செய்ய முடியலனா அப்புறம் எதுக்கு முதல்வர் பதவி..! ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!