தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published : Apr 09, 2019, 04:51 PM ISTUpdated : Apr 09, 2019, 04:55 PM IST
தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சுருக்கம்

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் காலியாக இருந்த மொத்தம் 22 தொகுதிகளில் 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகள் குறித்து வழக்குகள் இருந்ததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், தொகுதிகளோடு சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் மே-19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 22ம் தேதி இந்த 4 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏப்ரல்-29ம் தேதி கடைசிநாளாகும். வேட்புமனுவை திரும்ப பெற மே-2 கடைசி நாள்.

ஏப்ரல் -30ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மே-19ம் தேதி தேர்தல் நடைபெறும். மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியாகும் மே 23ம் தேதியே இந்த நான்கு தொகுதிகளுக்கும் ரிசல்ட் அறிவிக்கப்படும்.  

PREV
click me!

Recommended Stories

வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!
விஜயின் கிறிஸ்தவ வாக்குகளில் வேட்டு வைத்த ஸ்டாலின்..! திமுகவின் அதிரடி வியூகம்..!