மத்திய அமைச்சராக முடியாததால் ஆத்திரம்... காங்கிரஸை சீண்டும் தயாநிதி... ரண வேதனையில் ராகுல்..!

By Thiraviaraj RMFirst Published Jun 25, 2019, 2:48 PM IST
Highlights

மக்களவையில் இன்று திமுக எம்பி தயாநிதிமாறன் பேசுகையில் தமிழக அரசை ஊழல் அரசு என விமர்சனம் செய்ததற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 

மக்களவையில் இன்று திமுக எம்பி தயாநிதிமாறன் பேசுகையில் தமிழக அரசை ஊழல் அரசு என விமர்சனம் செய்ததற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மக்களவையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
’’தமிழகத்தில் மிக மோசமான ஊழல் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திட்டங்களை அதிமுக அரசு சரியாக செயல்படுத்தி இருந்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்க வாய்ப்பிலை. 2014ம் ஆண்டு தேர்தலில் பணபலத்தால் அதிமுக வென்றது. தமிழ்நாட்டில் ஊழலில் ஊறி இருக்கும் அரசு ஆட்சியில் உள்ளது. பதவியில் உள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளன. தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்களின் எந்த பிரச்சனையையும் அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. பாஜகவின் பலம் என்பது அவர்களிடம் இருந்து வரவில்லை. எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதுதான் உங்களுக்கு சாதகம்’’ எனப்பேசினார்.

தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். கூட்டணி கட்சியான அதிமுக தலைமையிலான அரசை தயாநிதி மாறன் விமர்சனம் செய்ததால், அதிமுக-வுக்கு ஆதரவாக பாஜக எம்பி-க்கள் முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதத்தில், சம்பந்தம் இல்லாமல் தயாநிதி மாறன் பேசுவதாக ராஜீவ் பிரதாப் ரூடி குற்றம்சாட்டினார். இதனால், மக்களவையில் சற்று நேரம் அமளி ஏற்பட்டது. 

பின்னர் அவர்களை சபாநாயகர் அமைதிப்படுத்தினார். அதன்பின்னர் தயாநிதி மாறன் தனது உரையை தொடர்ந்தார். அப்போது ’’தண்ணீர் பிரச்சனை முக்கியமான பிரச்சனை. அதனை தீர்க்க அரசு நடவடிக்க வேண்டும். குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. அந்தத்திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தி இருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது. பாஜகவுக்கு தமிழ்நாடு வாக்களிக்கவில்லையே ஏன் என்பதை நீங்கள் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் தமிழகம் மீது புகுத்துவதுதான் காரணம்’’ என்று குறிப்பிட்டார். 

’பாஜகவின் பலம் என்பது அவர்களிடம் இருந்து வரவில்லை. எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதுதான் உங்களுக்கு சாதகம்’’ என காங்கிரஸ் கட்சியை தயாநிதிமாறன் கூறியது அக்கட்சி எம்.பிக்களை கொதிப்படைய வைத்துள்ளது. இருமுறை மத்திய அமைச்சராக நமது ஆட்சியில் இருந்து பதவி சுகம் கண்ட தயாநிதிமாறன், காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் மத்திய அமைச்சர் பதவி கேட்டு இருப்பார். அது நடைபெறாமல் போன விரக்தியில் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் என ஆத்திரப்பட்டு வருகிறார்கள். 
 

click me!