
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி நாளை வருகை தரவுள்ளார். அங்கு பாதிக்கப்ட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்கிறார்.
கடந்த மாத இறுதியில் தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. 2000 ற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால் அம்மாவட்டம் முழுவதும் நீரில் மூழ்கியது.
ரப்பர், பலா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டுவதாக கூறி ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ஒகி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மக்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாளைய சந்தித்து ஆறுதல் சொல்கிறார்.
இதற்காக அவர் நாளை டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் நண்பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் புயலால் பாதிக்கக்ப்பட்ட பகுதிக்குச் சென்று பார்வையிடுகிறார்.
தொடர்ந்து புயலில் சிக்கி மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்கிறார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் முதன் முறையா ராகுல்காநதி தமிழகம் வருகிறார். இதனால்காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.