தேசியக் கொடியை அவமதித்த முதல்வர்: தலித்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளும் கட்சித்தலைவர்

 
Published : Nov 24, 2017, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
தேசியக் கொடியை அவமதித்த முதல்வர்: தலித்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளும் கட்சித்தலைவர்

சுருக்கம்

Rahul Gandhi to accept Dalit made Indian flag insulted by Gujarat CM Vijay Rupani

தலித் மக்கள் அளித்த மிகப்பெரிய தேசியக்கொடியை பாதுகாக்க இடமில்லை எனக்கூறி குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட, நிலையில், அந்த தேசியக்கொடியை பெற்றுக்கொள்ள தான் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சர்ஜன் அறக்கட்டளை தலித் சமூத்தினரின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் 125 அடி நீளம், 83.3 அடி அகலம் கொண்ட தேசியக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொடியை குஜராத் முதல்வர் விஜய் ரூபானியிடம் கொடுத்து, தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த முடிவுசெய்யப்பட்டது.

அதன்பெயரில் காந்திநகர் மாவட்டஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், முதல்வர் விஜய் ரூபானி தேசியக் கொடியை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

இது குறித்து நவ்சர்ஜன் அறக்கட்டளையின் தலைவர் மார்ட்டின் மெக்வான் கூறியதாவது-

நாட்டின் மிகப்பெரிய தேசியக்கொடியை நாங்கள் தயாரித்துள்ளோம். 125 அடி நீளத்தில், 83.3 அடி அகலத்தில் அது உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் விஜய் ரூபானியிடம் அந்த கொடியை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், முதல்வர் அறையில் இந்த கொடியை வைக்க இடமில்லை. இடம் கிடைக்கும் போது சொல்லிவிடுகிறோம். இப்போது கொடியை ஏற்றுக்கொள்ள முடியாது என முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். மாவட்ட ஆட்சியர் மூலமாகவும் சென்றும் கொடியை ஏற்க மறுத்துவிட்டன ர்.

இது தேசியக்கொடிக்கு முதல்வர் செய்த அவமதிப்பு ஆகும். அதுமட்டுமல்லாமல்,10 மாநிலங்களில் உள்ள தலித் மக்கள் சேர்ந்து தயாரித்த கொடியையும் அவமதித்து விட்டனர்.

கதர் துணியில் தலித் சக்தி கேந்திராவில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் 25 நாட்கள் கடினமாக உழைத்து இந்த தேசியக்கொடியை தயாரித்துள்ளனர். 

125 அடிநீளம் என்பது பாபாசாஹேப் அம்பேத்கரின் 125-வது பிறந்ததினத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 3 ந்தேதி முதல்வரைச் சந்திக்க முயற்சித்தோம். ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து,காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து இது குறித்து தெரிவித்தோம். அவர் தேசியக் கொடியை எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள சம்மதித்தார்.

குஜராத்தில் 2 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, சனாநத் நகரில் உள்ள தலித் சக்தி கேந்திராவுக்கு வரும்போது, அவரிடம் இந்த தேசியக் கொடியை ஒப்படைப்போம். அவரும் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வதாகத்த ெதரிவித்துள்ளார்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!