3 பேரிடம் இந்தியா அடிமையா கிடக்கு.. அடுத்த ஒரு வருஷத்துல என்ன நடக்குதுனு மட்டும் பாருங்க!! தெறிக்கவிட்ட ராகுல் காந்தி

 
Published : Jun 12, 2018, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
3 பேரிடம் இந்தியா அடிமையா கிடக்கு.. அடுத்த ஒரு வருஷத்துல என்ன நடக்குதுனு மட்டும் பாருங்க!! தெறிக்கவிட்ட ராகுல் காந்தி

சுருக்கம்

rahul gandhi slams bjp and rss

பிரதமர் மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகிய மூன்று பேரின் கைகளில் நாடே அடிமைப்பட்டு கிடப்பதாகவும், இன்னும் ஓராண்டுக்குள் இந்தியாவின் பலம் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் பாஜக, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகளை இணைத்து பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. 

கடந்த ஓராண்டில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களை பாஜக தனித்தோ, கூட்டணி அமைத்தோ கைப்பற்றி விட்டது. பஞ்சாப்பில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் ஆட்சியமைக்க முடிந்தது. கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. 

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க விடாமல் செய்துவிட்டாலும், காங்கிரஸை விட பாஜகவே அதிகமான தொகுதிகளை கைப்பற்றியது. இதுவும் காங்கிரஸிற்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது. 

இவ்வாறு கடந்த ஓராண்டாக நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பஞ்சாப்பை தவிர வேறு எந்த மாநிலத்தையும் காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை. மேலும், காங்கிரஸ் ஆட்சியிலிருந்து மாநிலங்களைக்கூட அந்த கட்சியால் தக்கவைத்து கொள்ள முடியவில்லை. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காங்கிரஸின் தொடர் தோல்விகள், அந்த கட்சிக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவிற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்ட காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. 

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இதர பிறபடுத்தப்பட்ட வகுப்புக்கான தேசிய மாநாடு டெல்லியில் நடந்தது. இந்த விழாவில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, நமது நாடு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த 3 தலைவர்களின் கைகளில் அடிமைப்பட்டு கிடக்கிறது.

அடுத்த 6 மாதம் முதல் ஓராண்டுக்கு உள்ளாக அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவிற்கு எதிராக ஒன்று திரளும். அப்போது, இந்தியாவின் பலம் என்ன என்பதை மோடி, அமித் ஷா, மோகன் பகவத் ஆகியோர் அறிவர். இந்தியாவை 3 பேர் ஆட்சி செய்ய முடியாது; மக்களே ஆட்சி செய்வர் என்பதையும் அவர்கள் உணர்வார்கள். பாஜக எம்பிக்களால் கூட பேசமுடியவில்லை. அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குரலே கேட்கிறது என ராகுல் காந்தி விமர்சித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!