ஒரு பதட்டமான, அறிய முடியாத குணம் கொண்டவர் ராகுல் காந்தி...! முன்னாள்அதிபர் பாரக் ஒபாமா..!

Published : Nov 13, 2020, 08:46 AM IST
ஒரு பதட்டமான, அறிய முடியாத குணம் கொண்டவர் ராகுல் காந்தி...! முன்னாள்அதிபர் பாரக் ஒபாமா..!

சுருக்கம்

ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது புத்தகத்தில் தெரிவித்து உள்ளார்.

ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது புத்தகத்தில் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா  புதிதாக வெளியிட்ட தனது அரசியல் நினைவுக் குறிப்பான "ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்" என்ற புத்தகத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து குறிப்பிட்டு உள்ளார்.

 அதில் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் பல தலைவர்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார் என்யூயார்க் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2009 முதல் 2017 வரை ஆட்சியில் இருக்கும் போது.ஒபாமா அமெரிக்கவின் அதிபராக இருந்தார்.இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் ஆகியோரும் அடங்குவர்.

ஒபாமாவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி நியூயார்க டைம்ஸ் மன்மோகன்சிங் மற்றும் ராகுல்காந்தி குறித்து கூறியிருக்கிறார்.  

பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒருவித உணர்ச்சியற்ற ஒருமைப்பாட்டைக் கொண்டவர்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, நியூயார்க் டைம்ஸ் கட்டுரை கூறி உள்ளது.

"ராகுல்காந்தி பற்றி கூறும் போது ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர், அவர் ஒரு மாணவராக இருப்பதால், அவர் பாடங்களை செய்து ஆசிரியரைக் கவர ஆர்வமாக இருந்தார், ஆனால் ஆழமாக எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வம் அல்லது கர்வம் இல்லை. ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், காங்கிரஸின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, டிசம்பர் 2017 இல் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது ஒபாமாவை சந்தித்தார். ராகுல்காந்தி இந்த சந்திப்பு குறித்து டுவீட் செய்திருந்தார்.அவரை மீண்டும் சந்திக்க ஆர்வமாக உள்ளேன்.அதிபர் பாரக் ஒபாமா கிரேட் உடன் ஒரு அருமையான அரட்டை இருந்தது" என்று ராகுல் காந்தி ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

PREV
click me!

Recommended Stories

தவெக வரலாறு படைக்கும்.. விஜய் தான் அடுத்த சி.எம்! செங்கோட்டையன் சூளுரை!
ராமதாஸ் கூட்டணியா..? தெறித்து ஓடும் விஜய்.. தவெகவிலும் அடைக்கப்பட்ட கதவு..!