ஒரே டுவிட்டில் மத்திய அரசை ஆட்டம்காண வைத்த ராகுல் காந்தி..!! மோடி , மக்களுக்கு கணக்கு சொல்ல வேண்டுமாம்..!!

By Ezhilarasan BabuFirst Published May 11, 2020, 12:25 PM IST
Highlights

பிரதமர் நிவாரண அறக்கட்டளைக்குத்தான் தற்போது கொரோனா நிவாரண பணிக்காக நாடு முழுவதும் இருந்து  கார்ப்பரேட் நிறுவனங்கள் ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சினிமா விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்கள் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து நன்கொடைகள் வந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தரப்படும் நிவாரணநிதி குறித்து முறையாக தணிக்கை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார் , கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது .  இதுவரை 2212 பேர் உயிரிழந்துள்ளனர் , நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும்போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது .அதேவேளையில் மத்திய அரசு எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி தனது அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்து வருகிறது  . இந்நிலையில் கொரோனா வைரஸ் செலவினங்களுக்காக பெறப்பட்டு வரும் பிஎம்- கேர்ஸ் நிதி குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார் . 

அதாவது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பெறப்படும் பிரதமர் நிவாரண நிதி முறையாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  பிரதமர் நிவாரண நிதி என்ற அமைப்பு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடியை தலைவராகக்கொண்டு பிஎம் - கேர்ஸ் அறக்கட்டளை என்ற புதிய அமைப்பு மார்ச் 28 அன்று அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்டது ,  அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர் .  இந்த பிரதமர் நிவாரண அறக்கட்டளைக்குத்தான் தற்போது கொரோனா நிவாரண பணிக்காக நாடு முழுவதும் இருந்து  கார்ப்பரேட் நிறுவனங்கள் ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சினிமா விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்கள் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து நன்கொடைகள் வந்து கொண்டிருக்கின்றன. 

கொரோனாவால் தொழில் முடக்கம் என்று கூறி ஆட்குறைப்பு ஊதியம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் கூட புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரதமரின் நிவாரண நிதிக்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்து வருகின்றனர் ,  800 ஊழியர்களுடன் இயங்கி வந்த பிரபல உடற்பயிற்சி நிறுவனம் ஒன்று குறுகிய காலத்தில் பல கிளைகளை மூடியுள்ளது ,  ஊழியர்களுக்காக அவை சராசரியாக வெரும் 2 கோடி வழங்கியுள்ளது , ஆனால் இதே நிறுவனம் பிஎம் - கேர்ஸ் மற்றும் பல்வேறு நிவாரண நிதுக்கும் மட்டும் 5 கோடி வழங்கிய தாராளம் காட்டி உள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிஎம் - கேர்ஸ்க்கு  500 கோடி வழங்கியுள்ளது இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெறப்படும் பிரதமர் நிவாரண நிதி சுயேச்சையான ஆடிட்டர் குழு மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் . 

பிஎம் - கேர்ஸ் போன்ற நன்கொடை அடிப்படையிலான நிதி எந்த ஒரு  சட்டத்தின் கீழோ அல்லது நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழோ வராது ஏனெனில் இது நாட்டின் ஒருங்கிணைந்த நிதியத்தின் பகுதியாக இல்லை  என்பதே காரணம்.  இந்த  நிதி நன்கொடைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் தணிக்கை செய்ய உரிமை இல்லை என்று சிஏஜி அலுவலகம் கூறியுள்ளது .  இதனை மனதில்  கொண்டே பிரதமர் நிவாரண நிதியை முறையாக தணிக்கை செய்வது அவசியம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு விவரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார் . 
 

click me!