டாஸ்மாக் ஆப் மூலம் ஆன்லைனில் மது வாங்க ஆர்டர் செய்யாதீர்கள்... அலறும் அதிகாரிகள்..!

By Thiraviaraj RMFirst Published May 11, 2020, 11:34 AM IST
Highlights

ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு 750 மில்லி அளவுள்ள மதுபானங்கள் மட்டுமே விற்கப்படும் என்கிற தகவல்கள்  சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் கூகுள் பிளே ஸ்டோரில் அப்படிப்பட்ட எந்த செயலியும் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை.
 

டாஸ்மாக் மது விற்பனைக் கடைகளில் சமூக இடைவெளி குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம் ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஆன்லைனில் மது வாங்க டாஸ்மாக் என்ற ஆப் (Tasmac App)அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எப்படி மது வாங்குவது என செய்திகள் பரவிவருகிறது. அதன்படி, உங்கள் மொபைலில் உள்ள பிளே ஸ்டோரில் சென்று "டாஸ்மாக்" ஆப்பை டவுன்லோட் செய்யது. அதில் ஆதார் அட்டையின் எண் மற்றும் சில தகவல்களையும் உள்ளிடவும். பின் ஒரு QR குறியீட்டைப் பெறுவீர்கள்.

அந்த தரவு TASMAC ஊழியர்களின் செல்போன்களில் பதிவு செய்யப்படும், QR ஐ ஸ்கேன் செய்வதன் மூலம், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் உங்களுக்கு விநியோகம் செய்யப்படும். இதன் மூலம் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு 750 மில்லி அளவுள்ள மதுபானங்கள் மட்டுமே விற்கப்படும் என்கிற தகவல்கள்  சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் கூகுள் பிளே ஸ்டோரில் அப்படிப்பட்ட எந்த செயலியும் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை.

tasmac.co.in என்ற தமிழக அரசின் இணையதள பக்கத்திலும், ஆன்லைன் விற்பனைக்கான எந்த வசதியும் செய்யப்படவில்லை. இது முழுக்கத் தவறான தகவல். தமிழக அரசே இதுதொடர்பான தகவலை உறுதிப்படுத்தும் வரையில், அவசரப்பட்டு போலியான பக்கங்களில் பணம் செலுத்தி ஏமாந்துவிட வேண்டாம் என டாஸ்மாக் அதிகாரிகள் கோரிக்கை வைக்கின்றனர். 

click me!