எந்த வளர்ச்சியும் இல்லாத மோடியின் 100 நாள் ஆட்சி ! செம காண்டில் டுவீட் போட்ட ராகுல் காந்தி !!

By Selvanayagam PFirst Published Sep 9, 2019, 8:39 AM IST
Highlights

பாஜக பதவியேற்று நூறு  நாட்கள் ஆகி விட்டன மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள்” ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லையே !  என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி தனது டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-ம் முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை அக்கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.  இது குறித்து ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜகவின் 100  நாள் ஆட்சியில் இந்தியாவில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆட்சி அர்ப்பணிப்பும், நல்ல நோக்கமும் கொண்டதாக இருப்பதாகவும் பிரதமர் மோடி உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.

இந்நிலையில் அதனை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  பாஜக பதவியேற்று 100 நாட்கள் ஆகி விட்டன. 

மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள். ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை. ஜனநாயகம் வீழ்த்தப்பட்டதும், விமர்சனத்தை தவிர்க்க ஊடகங்கள் மீதான கூடுதல் அடக்குமுறையும் நடைபெறுகிறது. 

சரியான திட்டமிடலும், பயணமும் தேவைப்படும் நிலையில் அது இல்லாத தலைமையும், பொருளாதார சூறையாடலும் தான் தற்போது நடைபெறுகிறது குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார். 

click me!