அமமுகவில் இருந்த வெளியேறும் வி.வி.ஐ.பி !! ஆதரவாளர்களுடன் கோவை ஹோட்டலில் ரகசிய பேச்சு !!

By Selvanayagam PFirst Published Sep 9, 2019, 7:44 AM IST
Highlights

14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்தவர எல்லோருக்கும் தெரிய வச்சசே நான் தான் ! இப்ப எனக்கே மரியாதை இல்ல ! நமக்கான் இடம் அமமுக இல்லை என கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்பியவுடன் அவர் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
 

டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வந்த அமமுக அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் படு தோல்வி அடைந்தது. இதையடுத்து அந்த கட்சியில் இருந்து விஐபி.க்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பே செந்தில் பாலாஜி, கலைராஜன் உள்ளிட்டோரும், தேர்தலுக்குப் பின் தங்கதமிழ் செல்வன், இசக்கிசுப்பையா ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான அமமுகவை விட்டு வெளியேறினர். தொடர்ந்து தற்போது வரை நிர்வாகிகள் செளியேறி வருகின்றனர். கிட்டத்தட்ட அமமுக கூடாரமே காலியாகிவிட்டது.

தற்போது முன்னாள் அமைச்சர் பழனியப்பன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே அககட்சியில் உள்ளனர். இந்நிலையில் புகேழேந்தி அதிமுகவில் இணைய உள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய புகழேந்தி, 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்தவர எல்லோருக்கும் தெரிய வச்சசே நான் தான் ! இப்ப எனக்கே மரியாதை இல்ல ! நமக்கான் இடம் அமமுக இல்லை என தெரிவித்துள்ளார். 

சீக்கிரமே வேறு கட்சியில் இணைவதற்கான வழியை தேடிக் கொண்டிருப்பதாகவும், போகும் இடத்தில் நமக்கான சிறப்பான இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்தார். இது தொடர்பான லீடியோ ஒன்றும் வெளியாகி பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வெளியாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்பியவுடன் புகழேந்தி  தனது ஆதரவாள்களுடம் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

click me!