தமிழை நசுக்கப் பார்க்கிறது பாஜக… கடுமையாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் தலைவர் !!

First Published Mar 19, 2018, 10:19 AM IST
Highlights
Ragul gandi blam bjp for they try to destroy tamil


தமிழர்கள் தங்கள் அழகான மொழியில் இருந்து பிற மொழிக்கு மாறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் ,  தமிழர்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுகிறது என்றும் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர்க ராகுல் காந்தி தமிழை அவர்கள் நசுக்கப் பார்ப்பதாக தெரிவித்தார்..

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84 ஆவது மாநாடு நடைபெற்றது.  இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில்  அக்கட்சியின் தலைவர் ஆவேசமாக பேசினார்.

பாஜகவிடம் இருந்து  நாட்டை மீட்போம் என்றும்  பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று இளைஞர்களிடம் கேட்டுப்பாருங்கள். தாங்கள் வேலையின்றி இருப்பதாகத்தான் கூறுகின்றனர். இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. மக்களின் நம்பிக்கையை மோடி அரசு இழந்துவிட்டது என குற்றம்சாட்டினார்.

ஆனால், இந்த உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை பாஜக திசைதிருப்பபுவதாகவும் கூறினார்.

அதே நேரத்தில் பாஜக  ஒரு அமைப்பின் குரலாக இருக்கிறது. ஆனால், காங்கிரசோ, நாட்டின் குரலாக இருக்கிறது. நாட்டுக்காக பேசுகிறது. பாஜகவைவிட  விட காங்கிரசிடம் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பாஜக தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், அதிகார போதையில் இருப்பவரை பாஜகவினர்  ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அத்தகைய நபர்களை காங்கிரசில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

மோடி என்ற பெயரே பெருமுதலாளிகளுக்கும், பிரதமருக்கும் இடையிலான நெருக்கத்தின் அடையாளமாக மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தை கொள்ளையடிப்பவர்களை மோடி அரசு பாதுகாப்பாக வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது என குற்றம்சாட்டினார்.

தமிழர்கள் தங்கள் அழகான மொழியில் இருந்து பிற மொழிக்கு மாறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் ,  தமிழர்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுகிறது என்றும் பாஜக மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

click me!