தேர்தலா நடக்கட்டும்: ‘பை’ சொல்லி நள்ளிரவில் ‘பாங்காக் நகருக்கு பறந்த’ ராகுல் காந்தி

By Selvanayagam PFirst Published Oct 6, 2019, 11:33 PM IST
Highlights

வரும் 21-ம் தேதி மகாராஷ்டிரா,ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு திடீரென பாங்காக் புறப்பட்டு சென்றுவிட்டார்.
 

வரும் 21-ம் தேதி மகாராஷ்டிரா,ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நட்சத்திர பேச்சாளர்களாக ராகுல் காந்தி உள்ளார். ஆனால், தேர்தல் குறித்து கருதிக்கொள்ளாமல் ராகுல் காந்தி பாங்காக் புறப்பட்டு சென்றது கட்சியினர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் இருந்து நேற்று இரவு பாங்காக் செல்லும் விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் ராகுல் கந்தி புறப்பட்டுச் சென்றார்

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மிலந்த் தியோராவுக்கும், சஞ்சய் நிருபத்துக்கும் வெளிப்படையாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்யமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஹரியானா மாநிலத்தின் பூபேந்திர்சிங் ஹூடாவுக்கும், தன்வருக்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியதால் தன்வர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இரு மாநிலங்களிலும் தேர்தல் நேரத்தில் உட்கட்சி பூசல் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி பாங்காக் சென்றுள்ளது கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி ட்விட்டரில் அளித்த விளக்கத்தில் “ ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுதந்திரம், அந்தரங்கம் இருப்பதை மதிக்க வேண்டும். முற்போக்கு, தடையற்ற ஜனநாயகத்தில் இது அடிப்படையான கொள்கை. ராகுல்காந்தியின் தனிப்பட்ட பயணத்தையும், அரசியல் பயணத்தையும் கலக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே ராகுல் காந்தி மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் உறுதியாகப்பிரச்சாரம் செய்வார், வரும் 11-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியினர் சிலர் ராகுல் காந்தி பாங்காக் சென்றுள்ளார் என்றும் சிலர் கம்போடியா சென்றுள்ளார் என்று இரு வேறு இடங்களைக் குறிப்பிடுகின்றனர்.

click me!