மின்சாரத்தைக் கண்டுபிடித்தது அகத்தியர்... ஹெச். ராஜா போட்ட அடுத்தடுத்த சீரியஸ் ட்வீட்கள்!

By Asianet TamilFirst Published Oct 6, 2019, 11:02 PM IST
Highlights

ஹைட்ரஜனை இறுக்கமான துணியில் அடைத்தால்,அதை காற்றியக்கவியலில் பயன்படுத்தலாம், அதாவது அது காற்றில் பறக்கும. இதுவே இன்றைய ஹைட்ரஜன் பலூனாகும். பிரமிக்கத்தக்க இந்த விஷயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல் முறைப்படுத்தி உள்ளார் நம் அகத்தியர்

மின்சாரத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் தமிழ் மொழியின் தந்தையான அகத்தியர் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் மின்சாரத்தைக் கண்டுபிடித்தது தமிழ் மொழியின் தந்தையான அகத்தியர் என்று அடுத்தடுத்து 4 ட்வீட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில், “பெருமைகொள்வோம் - மின்சாரத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் நம் தமிழ்மொழியின் தந்தையான அகத்தியர். மின்சார பேட்டரியை உருவாக்கும் முறை அகஸ்திய சம்ஹிதாவில் விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் தண்ணீரை  பிராணவாயு(Oxygen)  மற்றும் ஜலவாயுவாக(Hydrogen) பிரிக்கலாம் என்றுள்ளது. 
இப்போதுள்ள பேட்டரி செல்களில் மின்சாரம் உருவாக்கும் முறையும் அகத்தியரின் முறையும் ஒத்துப்போகிறது.
1.ஒரு மண்பானை, 
2.செப்பு தட்டு (Cu), 3.செப்புச்சல்பேற்று(CuSo4), 
4.ஈரமான மரத்தூள், 
5.துத்தநாக ரசக்கலவை(Zn-Hg) ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கியுளார். 
இதன் மூலம் திறந்த சுற்று மின்னழுத்தத்தை 1.138V  வோல்ட்டுகளாகவும், குறுகிய சுற்று மின்னோட்டத்தை 23 mA  ஆகவும் தருகிறது. 100 மண்பானைகளின் சக்தியை நாம் தண்ணீரில் பயன்படுத்தினால், நீர் அதன் வடிவத்தை பிராண வாயுவாகவும் மற்றும் மிதக்கும் ஜலவாயுவாகவும் மாற்றும்.


ஹைட்ரஜனை இறுக்கமான துணியில் அடைத்தால்,அதை காற்றியக்கவியலில் பயன்படுத்தலாம், அதாவது அது காற்றில் பறக்கும. இதுவே இன்றைய ஹைட்ரஜன் பலூனாகும். பிரமிக்கத்தக்க இந்த விஷயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல் முறைப்படுத்தி உள்ளார் நம் அகத்தியர்.” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

click me!