இந்திய மண்ணில் கால் பதித்தது ரபேல் விமானம்.!! தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு செய்த விமானப்படை வீரர்கள்.!

By T BalamurukanFirst Published Jul 29, 2020, 9:14 PM IST
Highlights

இந்திய மண்ணிற்கும் இந்திய ராணுவத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது ரபேல் விமானம். அந்த விமானம் இந்திய மண்ணில் கால்பதித்திருக்கிறது. அதற்கு வாட்டர் சல்யூட் அடித்து மரியாதை செய்திருக்கிறது.
 

  இந்திய மண்ணிற்கும் இந்திய ராணுவத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது ரபேல் விமானம். அந்த விமானம் இந்திய மண்ணில் கால்பதித்திருக்கிறது. அதற்கு வாட்டர் சல்யூட் அடித்து மரியாதை செய்திருக்கிறது.

பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய மண்ணிற்கு விஜயம் செய்திருக்கின்றன.

ரபேல் போர் விமானங்களின் பயணத்தின்போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வந்தன. பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை இந்திய விமானப்படை தனது டுவிட்டரில் பகிர்ந்தது.

7 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு இன்று மதியம் 1.30 மணி அளவில் இந்திய எல்லைக்குள் ரபேல் போர் விமானங்கள் நுழைந்தன.அப்போது மேற்கு அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலுடன் ரபேல் போர் விமானத்தை இயக்கிவரும் குழு தொடர்பு கொண்டது. இந்திய கடல் எல்லைக்குள் ரபேல் தலைவரை வரவேற்கிறோம் என்று ஐ.என்.எஸ். தகவல் அனுப்பியது.

 ரபேல் விமானி, மிக்க நன்றி. கடல்களைக் காக்கும் இந்திய போர்க்கப்பலைக் கொண்டிருப்பது மிகவும் உறுதியளிக்கிறது  ஐஎன்எஸ் பெருஞ்சிறப்போடு இந்திய எல்லையை தொடலாம். மகிழ்ச்சியான தரையிறக்கங்கள் அதன்பின் இரண்டு Su-30MKIs விமானங்கள் படைசூழ கம்பீரமாக அரியானா நோக்கி  பயணத்தை தொடர்ந்த ரபேல் விமானங்கள் மாலை 3.15 மணியளவில் அம்பாலா விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.


இதையடுத்து புதிய விமானங்கள் விமானப்படை தளத்தில் தரை இறக்கப்படும் போது கடைபிடிக்கப்படும் வாட்டர் சல்யூட் என்ற முறை பின்பற்றப்பட்டது.விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ரபேல் போர் விமானங்களை வரவேற்றார். இந்த வரவேற்பு நடைமுறைகளுக்கு பின்னர் தங்க அம்புகள் (Golden Arrows) பிரிவில் ரபேல் இணைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!