விஷால் ஒரு குளத்து ஆமை.. ஒரு இடம் நல்லா இருந்தா அங்கே போய் கெடுத்துடுவார்..! ராதாரவி கடும் தாக்கு..!

 
Published : Dec 05, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
விஷால் ஒரு குளத்து ஆமை.. ஒரு இடம் நல்லா இருந்தா அங்கே போய் கெடுத்துடுவார்..! ராதாரவி கடும் தாக்கு..!

சுருக்கம்

radharavi criticize vishal

விஷால் ஒரு குளத்து ஆமை என நடிகரும் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான ராதாரவி விமர்சித்துள்ளார்.

வரும் 21-ம் தேதி நடக்க இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை நேற்று நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.

நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிடுவதற்கு திரைத்துறையில் சில ஆதரவு குரல்கள் இருந்தாலும் எதிர்ப்புகளே அதிகளவில் உள்ளன. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால், தேர்தலில் போட்டியிடுவதால், மற்ற தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இரண்டாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்களின் போராட்டத்துக்கு ராதாரவி, ராதிகா ஆகியோர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

விஷால் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராதாரவி, விஷால் ஒரு குளத்து ஆமை. ஒரு இடம் நன்றாக இருந்தால் அங்கு சென்று அதை கெடுத்துவிடுவார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் வெற்றி பெற முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலின் நிலையும் ஜெ.தீபாவின் நிலையும் ஒன்றுதான்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால், தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அரசியல் மிகவும் கஷ்டம் தம்பி விஷால் என ராதாரவி விமர்சித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!