
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நெருங்கிவிட்டார்.
ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகமாக தினகரன் பெற்றுள்ளார். மதுசூதனன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
ஆனால், பிரதான எதிர்க்கட்சியாகவும் வலுவான அடித்தளம் கொண்ட திமுக இந்த முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் மருது கணேஷ், டெபாசிட் வாங்குவாரா என்பதே சந்தேகமாக உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுகவை சேர்ந்த ராதாரவி, ஆர்.கே.நகரில் அதிமுக பின்னடைவை சந்தித்திருப்பது ஆளும் கட்சி மீதான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. முன்னிலை பெற்று வரும் தினகரனுக்கு என்னுடைய வாழ்த்துகள். ஆர்.கே.நகரில் போட்டியிட்ட பாஜகவின் முடிவு தவறானது. இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று கூறினார்.