
ஆர்.கே.நகரின் வெற்றி எனக்கானது அல்ல எனவும் அது மக்களுக்கான வெற்றி எனவும் சுயேட்சை வேட்பாளராக இருந்து முன்னிலையில் இருக்கும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி வாக்குபதிவு நடந்தது.
இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குபதிவு அன்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 258 வாக்கு சாவடி மையங்களில் 84 மையங்களில் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இத்தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.ஆர்.கே.நகரில் 258 வாக்குச்சாவடிகளில் பதிவான 1.76 லட்சம் வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 12 ஆவது சுற்றின் முடிவில் டிடிவி தினகரன் 64627 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றார். இதன் மூலம் நிச்சயம் டிடிவி வெற்றி பெறுவார் என்ற நிலை நிலவி வருகின்றது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆர்.கே.நகரின் வெற்றி எனக்கானது அல்ல எனவும் அது மக்களுக்கான வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.