வேலூரில் ஜெயிக்கபோவது துரைமுருகன் மகன் தான், ஜெயிக்க வைக்கப் போவது ஓபிஎஸ் மகன்! வெலவெலத்து கிடக்கும் ஏசி சண்முகம்... அதிர்ச்சியில் அதிமுக...

By sathish kFirst Published Jul 31, 2019, 11:11 AM IST
Highlights

ரத்ததான வேலூர் தொகுதிக்கு தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான உச்சகட்ட பிரசாரத்தில் அதிமுக, திமுக உக்கிரமாக இறங்கியுள்ளன.  

கடந்த நாடாளுமன்ற பிரசாரத்தின் போது, சாத்தியமில்லாத பொய் உறுதிமொழிகளைக் கூறி, மக்களை நம்ப வைத்து ஜெயித்துவிட்டார் ஸ்டாலின். ஆனா வேலூரில் எங்களின் ஒத்த வெற்றியும் அவரின் மொத்த வெற்றியை நொறுகும். என்று பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசியபடி களமிறங்கியுள்ளனர் அதிமுக அமைச்சர்கள்.

வேலூரில் வெற்றி வேட்பாளரை நிர்ணயிக்கும் இடத்தில் இஸ்லாமிய வாக்கு வங்கி இருக்கிறது. வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து மட்டும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வாக்குகளை அப்படியேவோ அல்லது அதில் பெரும்பான்மையையோ வாக்குகளை அள்ளுவதற்கு 2 கட்சிகளும் வெறித்தனமாக வேட்டையில் இறங்கியுள்ளன. காரணம், அப்படி நடந்துவிட்டாலே கூலாக வின் பண்ணிடலாம். திமுக. வழக்கம்போல தன்னை ‘சிறுபான்மை மக்களின் காவலன்’ என்று சொல்லி ஓட்டு கேட்கிறது. 

ஆனா பிஜேபி.யின் கூட்டாளியாக இருக்கும் அதிமுகவோ முஸ்லீம் மக்களின் முன்னாடி போய் நிற்கவே கூச்சப்பட்டது. அதனால் ராஜ்யசபா எம்பி. பதவியை வேலூரை சேர்ந்த முகமது ஜானுக்கு கொடுத்தது. கூடவே இதோ வேலூரின் வளர்ச்சிக்காக ஒரு எம்பியை நாங்களே தந்துவிட்டோம். நீங்களும் ஒரு எம்பியை உருவாக்குங்கள் இஸ்லாமிய நண்பர்களே என்று ஸீன் போட்டது. எம்பியான முகமது ஜானும் தன் மத மக்கள் வாழும் பகுதிகளில் முகாம் போட்டு ‘தயவு செஞ்சு ஏசி.சண்முகத்துக்கு ஓட்டு போடுங்க. அவரோட வெற்றியானது நம்ம அதிமுகவின் வெற்றி என்று உரிமையோடு ஓட்டு வேட்டையாடினார். இது இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை அதிமுக. பக்கம் திருப்பியது. 

இதனாலே திமுக. வெலவெலத்துப் போனது. அதிலும் துரைமுருகன் வழக்கம்போல்  உணர்ச்சிப் பொங்கி, ‘அய்யகோ என் மகன் தோற்றுவிடுவானா? என் புள்ள எம்பி.யாக முடியாதா? என்று மனுஷன் குலுங்கிக் குலுங்கி அழுதேவிட்டார். இந்நிலையில் தான் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கிடைத்த வாய்ப்பை திமுக.வும் வகையாகப் பயன்படுத்த துவங்க, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இஸ்லாமிய வாக்கு வங்கி அப்படியே திமுகவின் பக்கம் அலேக்காக சாய்ந்துள்ளது.

தங்களுக்கு இப்படியொரு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுத்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி நாடாளுமன்ற தொகுதியின் எம்பி பெரியகுளம் ரவீந்திரநாத்துக்கு கோயில் கட்டி கும்பிடாத குறையாக நன்றி சொல்லிக் கொண்டிருக்கின்றனர் திமுக.வினர். 

ஆமாம் அப்படி என்ன செய்துவிட்டார் பெரியகுளம் ரவி? என கேட்டால், அதை விளக்கும் அரசியல் விமர்சகர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய இந்துக்களுக்கு கொஞ்சமும் பிடிக்காத மசோதா இது. இதற்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேசிவிட்டு, வெளியேறிவிட்டன. ஆனா அதிமுக. சார்பாக மக்களவை சென்றிருக்கும் ஒரேயொரு எம்பி.யும், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்தோ இந்த மசோதாவுக்கு ஆதரவாக பேசிவிட்டு, ஓட்டும் போட்டார். 

இந்த விஷயத்தைத்தான் கையிலெடுத்து, வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் லட்சோப லட்சம் இஸ்லாமிய மக்களிடம் கொண்டு சென்றது திமுக பாருங்கள் சிறுபான்மை மக்களின் விரோதிகளின் செயலை! மதவாத பிஜேபி கவர்மெண்ட், முஸ்லீம் ஆண்களை நசுக்கி அழிக்கும் வகையில் கொண்டு வந்திருக்கும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை ஆதரித்து பேசி, வாக்கும் போட்டிருக்கிறது அதிமுக. இவர்களுக்கா உங்கள் வாக்கு? என்று நறுக்கென ஒரு பிட்டை போட்டுள்ளனர் பிரசாரத்தில். இதன் விளைவாக மளமளவென இஸ்லாமியர் வாக்கு வங்கி திமுக பக்கம் சாய துவங்கியுள்ளது. அதனால் திமுக பயங்கர ஹேப்பி! என்கிறார்கள். 

click me!