ஓபிஎஸ் பற்றிய கேள்வி... அமித்ஷாவை சந்தித்த பின் சைலண்ட் மோடுக்கு போன இபிஎஸ்? நடந்தது என்ன?

Published : Sep 20, 2022, 12:48 PM ISTUpdated : Sep 20, 2022, 12:50 PM IST
ஓபிஎஸ் பற்றிய கேள்வி... அமித்ஷாவை சந்தித்த பின் சைலண்ட் மோடுக்கு போன இபிஎஸ்? நடந்தது என்ன?

சுருக்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. போதைப் பொருள் காரணமாக மாணவர்கள் சீரழிந்து வருவது தொடர்பாக உள்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். போதைப் பொருளை தடுப்பதில் இந்த அரசு மெத்தனமாக உள்ளது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை என எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 3 நாள் பயணமாக டெல்லிக்கு சென்றார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரமதர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர்  அமித்ஷாவை சந்தித்தனர். 

இதையும் படிங்க;- பொதுக் குழு தீர்மானமே செல்லாது.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த அதிமுக உறுப்பினர்.. அதிரடி காட்டிய உயர்நீதி மன்றம்.

இதனையடுத்து, இபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். கோதாவரி - காவிரி இணைப்பு நடந்ததாய் வாழி காவிரி திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. போதைப் பொருள் காரணமாக மாணவர்கள் சீரழிந்து வருவது தொடர்பாக உள்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். போதைப் பொருளை தடுப்பதில் இந்த அரசு மெத்தனமாக உள்ளது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் கொலை, கொள்ளை, குற்றங்கள் அதிகரித்துள்ளது குறித்தும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தோம்.

தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை. டெல்லியில் ஓபிஎஸ் பற்றிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காத எடப்பாடி பழனிசாமி சாரி வணக்கம் என கூறி பேட்டியை முடித்தார். எடப்பாடி பழனிசாமி எப்போது பேட்டி கொடுத்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடி வந்த நிலையில் உள்துறை அமித்ஷாவை சந்தித்த பின் எந்த ஒரு விமர்சனங்களையும் முன்வைக்காமல் சாரி வணக்கம் என கூறி இபிஎஸ் நழுவியுள்ளார். ஏற்கனவே 2017ம் ஆண்டு ஓபிஎஸ், இபிஎஸ் பிரிந்து இருந்த போது பாஜகதான் ஒற்றிணைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி வெளியேறினார்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!