15 மாதங்களில் 3 புரட்சி.. இது ஸ்டாலின் ஆட்சியே இல்லை.. மார்தட்டும் தமிழக முதலமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2022, 11:40 AM IST
Highlights

தற்போது நடப்பது ஸ்டாலின் ஆட்சி அல்ல அதுதான் திராவிடமாடல் ஆட்சியென முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் மூன்று முக்கிய திட்டங்களை செய்திருப்பதாகவும், அந்த திட்டங்கள் 3ம் புரட்சி திட்டங்கள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தற்போது நடப்பது ஸ்டாலின் ஆட்சி அல்ல அதுதான் திராவிடமாடல் ஆட்சியென முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் மூன்று முக்கிய திட்டங்களை செய்திருப்பதாகவும், அந்த திட்டங்கள் 3ம் புரட்சி திட்டங்கள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதுவரை அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன. அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனமும் அரசுக்கு எதிராக இருந்து வருகிறது. இதே நேரத்தில் மின் கட்டண விலை உயர்வு அரசு மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அதிரடியாக பதில் அளித்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு:- 

இதையும் படியுங்கள்: அடித்து சித்ரவதை.. கதறும் தமிழர்களை பார்க்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.. வேதனையில் வெதும்பும் வேல்முருகன்.!

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன? என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா ஆட்சி நடைபெறும் போது அந்த ஆட்சியை என கூறினார்கள், கலைஞர் கருணாநிதியின் ஆட்சி நடைபெற்றபோது அதை கலைஞர் கருணாநிதி ஆட்சி என தெரிவித்தார்கள், ஆனால் தற்போது ஸ்டாலின் ஆட்சி நடைபெறுகிறது, இது ஸ்டாலின் ஆட்சியை இல்லை திராவிட மாடல் ஆட்சி என்று தான் குறிப்பிட வேண்டும், ஏனென்றால் அண்ணா கலைஞர் ஆட்சியை சேர்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி,  திராவிட மாடல் என்றால் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். இதை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்: 2024ல் பாஜகவுடன் கூட்டணியா.? "உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்" ஒரே பதிலில் தெறிக்கவிட்ட முதல்வர் ஸ்டாலின்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது பெரியாரின் ஆசை, அந்த ஆசை நிறைவேறவில்லை, அதேபோன்று கலைஞர் கருணாநிதிக்கு மக்களுக்கு பல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது, அந்த ஆசை நிறைவேறவில்லை, ஆனால் எனது தலைமையிலான ஆட்சியில் அதை நிறைவேற்றுவதால் திராவிட மாடல் ஆச்சி என்கிறோம் என்றார். அதேபோல் கடந்த 15 மாத ஆட்சியில் உங்களுக்கு மனநிறைவைத் தந்த திட்டம் எது என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அறிவித்தது தான், இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை மிச்சமாகிறது, இதனால் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும்  சூழல் உருவாகியுள்ளது.

இது ஒரு புரட்சி திட்டமாகவே பார்க்கப்படுகிறது, பெண்கள் மத்தியில் இத்திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, அதே போல் கல்லூரி  மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்,  அதேபோல் அரசுப் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் நேரடியாக அவர்கள் வங்கி கணக்கிற்கு வழங்கப்படுகிறது, இததிட்டம் கல்வி புரட்சியை ஏற்படுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதனால் அதிக அளவில் மாணவிகள் மேற்படிப்புக்கு செல்வார்கள்.

இதேபோல மதுரையில் தொடங்கப்பட்ட காலை  சத்துணவு திட்டம், நூற்றாண்டுக்கு முன்பே மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது, ஆனால் இடையில் தடைபட்டது பின்னர் மீண்டும் காமராஜர் ஆட்சி காலத்தில் அது நடைமுறைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக காலை சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன், இந்த மூன்று திட்டங்களும் வரலாற்றில் பதிவாகி இருப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!