2024ல் பாஜகவுடன் கூட்டணியா.? "உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்" ஒரே பதிலில் தெறிக்கவிட்ட முதல்வர் ஸ்டாலின்

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2022, 10:50 AM IST
Highlights

எதிர்வரும் 2024  நாடாளுமன்ற தேர்தலில் தற்போது உள்ள அதே கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் எந்த சமரசமும் இல்லை, மாநில  உரிமை பாதிக்கப்படுவதை தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 2024  நாடாளுமன்ற தேர்தலில் தற்போது உள்ள அதே கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் எந்த சமரசமும் இல்லை, மாநில  உரிமை பாதிக்கப்படுவதை தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, இதுவரை அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது, அதே நேரத்தில் மின்கட்டணம் உயர்வு, சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, திமுக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் சித்தாந்த ரீதியாக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் விமர்சனங்கள் வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற  தேர்தலுக்கான வேலைகளில் இப்போது அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. இந்நிலையில்தான் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் முறையாக  சிறப்பு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் நெறியாளர், எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அவற்றுள் ஒரு சில கேள்வி  பதில்கள் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்:  திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி வெளியேறினார்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

தேர்தல் கூட்டணியில் பாஜக உடன் எந்த சம்பந்தமும் இல்லை, தேர்தல் கூட்டணி இல்லை, தற்போதுள்ள  கூட்டணியுடன் தான் எதிர்த்து நிற்கப் போகிறீர்களா.? என்ற கேள்விக்கு, ஆம், அதில் உங்களுக்கு என்ன சந்தேகம், அதில் நீங்கள் எந்த சந்தேகமும் பட வேண்டிய அவசியம் இல்லை 
என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

இரண்டாவது கேள்வியாக, மாநில சுயாட்சி என்பது அகில இந்திய அளவில் எந்த அளவிற்கு இருக்கிறது என்ற நெறியாளரின் கேள்விக்கு, முதலமைச்சர் ஸ்டாலின், எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் நிச்சயமாக மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் பறிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அறிஞர் அண்ணாவின் உயிலில் மாநில சுயாட்சி பற்றித்தான் குறிப்பிட்டுள்ளார், அதனால் தான் அண்ணாவுக்கு பிறகு கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு 5 முழக்கங்களை முன்வைத்தார், அந்த ஐந்து முகங்களில் ஒன்று தான் மாநில சுயாட்சியை மத்தியில் கூட்டாட்சி என்பது, அது ஒரு கோரிக்கையாகவே வைக்கப்பட்டது. இப்போது நாங்களும் அதைத்தான் வலியுறுத்துகிறோம்.

இதையும் படியுங்கள்:  புறம்போக்கு களவாணி பயலுக.. ஓசி சோறு வீரமணி.. ஆ.ராசாவுக்கு வக்காலத்து வாங்கிய வீரமணியை ரவுண்டு கட்டிய பாஜக.!

இன்று மத்திய அரசு மாநிலத்தின் எல்லா அதிகாரத்தையும் உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது. நிதி அதிகாரம், ஜிஎஸ்டி, புதிய கல்விக் கொள்கை என பல பிரச்சினைகளை கொண்டுவந்து மாநில அரசுகளை முடக்கப்பார்க்கிறது, மாநில அரசுகளை இப்படி பழிவாங்குவதற்கான பல முறைகளை கையாண்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் நிச்சயமாக மாநில சுயாட்சி பெற வேண்டும், அதற்கு இன்று பல மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள், மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் ஆங்காங்கே குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். மொத்தத்தில் இது நல்ல அறிகுறி தான் என நினைக்கிறேன், வெற்றி பெற வேண்டும் அவர் கூறியுள்ளார்.

பெரும்பாலும் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் பல விஷயங்களில் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற விமர்சனம் பரவலாக இருந்து வருகிறது,  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது சட்டமன்ற தேர்தலிலோ  திமுக பாஜகவுடன் கைகோர்ப்பதற்கு கூட வாய்ப்பிருக்கிறது என விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தற்போதுள்ள கூட்டணியுடன் தான் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக ஆணித்தரமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!