கடும் கூச்சல் குழப்பம் - பெஞ்சின் மீது ஏறிய திமுக உறுப்பினர்... வாக்கெடுப்பு தொடர் தாமதம்

First Published Feb 18, 2017, 11:57 AM IST
Highlights


சட்டப்பேரவைக்குள் உறுப்பினர்கள் தவிர யாருக்கும் அனுமதியில்லை.

பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் என யாரையும் அனுமதிக்கவில்லை.

சட்டசபை ஊழியர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே கசிந்து கொண்டிருக்கிறது.

மூத்த நிருபர்கள் சிலர் அவர்களை தொடர்பு கொண்டு செய்திகளை சேகரித்து வருகிறன்றனர்.

தமிழக வரலாற்றின் இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து 40 நிமிடங்களாக அமளி துமளி நடைபெற்று வருகின்றனர்.

ஓபிஎஸ்சும் ஸ்டாலின் தரப்பும் கை கோர்த்துள்ளதால் கடுமையான நெருக்கடி சபாநாயகருக்கு ஏற்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு தொடர்ந்து நடக்க விடாமல் நெருக்கடி கொடுக்கின்றனர் திமுகவினர் ஓபிஎஸ் தரப்பினரும்.

குறிப்பாக திமுகவினரின் குற்றச்சாட்டுக்கு எதிர்குரல் எழுப்பிய சைச்க்லா ஆதரவு உறுப்பினர்களுக்கு சத்தம் போட்டு மிரட்டி திமுக உறுப்பினர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

இதில் அதிமுக சசிகலா தரப்பு ஆடித்தான் போயுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன் எதிரே இருந்த பெஞ்சின் மீது ஏறி நின்று வேட்டியை மடித்து கொண்டு சசிகலா தரப்புக்கு சவால் விடுத்தார்.

இதனால் சட்டபேரவை அரங்கமே அமளிக்கு ஆளானது.

தொடர்ந்து 40 நிமிடங்களுக்கு மேலே கூச்சல் குழப்பம் நீடித்தாலும் சபாநாயகர் தனபால் தனது முடிவில் பிடிவாதமாகவே இருப்பதாக இருக்கிறது .

11 மணிக்கு வாக்களிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 11.45 மணிக்கு கூட வாக்கெடுப்பு துவங்கவில்லை.

இந்த கூச்சல் குழப்பங்களிடயே தொடர்ந்து காங்கிரஸ் ராமசாமி ஓபிஎஸ் ஆகியோர் பேசினர்.

click me!