
ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழி வகுக்கும் என்பதால் அதை கோருகிறோம்.
ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் பேசினார். ரகசிய வாக்கெடுப்பு ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என்பதால் அதை கோருகிறோம் என்று ஸ்டாலின் பேசினார்.
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பெரும் அமளிக்கிடையே மு.க.ஸ்டாலின் , ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தினர்.
சசிகலா , ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்த நிலையில் சசிகலா தரப்பினர் தங்களுக்கு ஏராளமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்க வேண்டும் என உரிமை கோரினர்.
சட்டசபை துவங்குவதற்கு முன்னர் சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் நடந்து சட்டமன்றத்திற்கு வரும் நிலை ஏற்பட்டதாக கூறினார். தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதிமுக ஓபிஎஸ் அணி கொறடா செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். மேலும் திமுக , காங்கிரஸ் , ஓபிஎஸ் அணியினர் ரகசிய வாக்கெடுப்பு கோரி முழக்கமிட்டனர். இதையடுத்து எதிர்த்து அதிமுகவினரும் முழக்கமிட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.முதல்வர் பேசிய பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஏன் ரகசிய வாக்கெடுப்பு கோருகிறேன் என்றால் அதில் தான் ஜனநாயகம் காக்கப்படும். ஆகவே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
இவ்வளவு அமளிக்கிடையில் சட்டசபையில் வாக்கெடுப்பை நடத்துவதை விட வேறொரு நாளில் அமைதியாக நடத்தலாம் என்ற கோரிக்கை வைத்தார்.
15 நாட்கள் அவகாசம் இருக்கும் போது ப்போது ஏன் இந்த அவசரம். எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே ரகசிய வாக்கெடுப்பு ஒன்றே வழி இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இவ்வளவு அமளிக்கிடையில் சட்டசபையில் வாக்கெடுப்பை நடத்துவதை விட வேறொரு நாளில் அமைதியாக நடத்தலாம் என்ற கோரிக்கை வைத்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஓபிஎஸ் பேச அழைக்கப்பட்டார்.