புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ- ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார்

 
Published : Apr 26, 2017, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ- ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார்

சுருக்கம்

puthukootai ex-mla joined in ops team

அதிமுகவில் இருந்து கடந்த பிப்ரவரி ஜனவரி மாதம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலகி தனி அணியை உருவாக்கினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து மூத்த நிர்வாகிகள், 12 எம்எல்ஏக்கள், எம்பிக்களும் சென்றனர்.

இதனால், அதிமுகவில் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரது அணியில் உள்ளவர்கள் அதிருப்தியை வெளி காட்டாமல் இருந்தனர்.

தேர்தல் ஆணையம் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதனால், வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது சூழல் நிலவியது. இதற்காக இரட்டை இலை சின்னம் தங்களுக்கே வழங்க வேண்டும் என கோரி, இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரத்தை சமர்ப்பித்தனர்.

இதற்கிடையில், இடை தரகர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி.தினகரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

முன்னதாக சின்னத்தை கைப்பற்ற வேண்டும். ஆட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும். கட்சியும் காப்பற்றப்பட வேண்டும். இதனால், இரு அணிகளும் ஓரணியாக செயல்பட வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கான பேச்சு வார்த்தை இன்று மதியம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜசேகரன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு இன்று சென்றார்.

அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது அணியில் தன்னை இணைத்து கொண்டார். இதனால் தற்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியில் 13 எம்எல்ஏக்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!