ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவிற்கு அதிகரிக்கும் ஆதரவு .! பாஜகவை தொடர்ந்து இபிஎஸ்க்கு கை கொடுத்த முக்கிய கட்சி

By Ajmal KhanFirst Published Feb 8, 2023, 12:28 PM IST
Highlights

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், புதிய நீதிக்கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுக - ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு போட்டியிடுகிறார். நேற்றோடு வேட்பு மனு தாக்கல்நிறைவடைந்த நிலையில் 96 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்றைய தினம் வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சிக்கு எதிரான தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற பலத்தோடு அதிமுக களம் இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவின் ஓட்டுக்கள் பிரிந்து காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற்று விடும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்! EPS தரப்புக்கு அனுமதி.. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.!

புதிய நீதிக்கட்சி ஆதரவு

இதன் காரணமாக ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஒட்டுமொத்த வாக்கானது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக  பாஜக நேற்று அறிவித்திருந்தது. ஆளும் கட்சியின் வேட்பாளரை தோற்கடிக்க அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பாஜக கூட்டணியில் இருந்த புதிய நீதிக்கட்சியும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தரும் அதிமுக வேட்பாளருக்கு புதிய நீதிக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தந்து வெற்றியடைய வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இரவோடு இரவாக பழனி கோயில் அடிவாரத்தில் இருந்த வேலை அகற்றியது ஏன்.? திமுக அரசுக்கு எதிராக சீறும் சீமான்

click me!