.35 எம்எல்ஏக்கள் உங்க பக்கம் இல்லையே..!அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் இன்று நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் 30 கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்துக்கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் எடப்பாடி அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் தினகரனுக்கு சில எம்எல்ஏக்கள் ஆதரவு தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் காரணமாக எடப்பாடி அரசு நீடிக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சற்று குஷியான தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் 30 கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்துக்கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்தனர்.அவர்கள் முகத்தில் வாட்டம் காணப்படுகிறது. அவர்களுக்கே தெரிந்துவிட்டது ... எல்லாம் முடிந்து விட்டதென என தெரிவித்தார்.அதாவது எடப்பாடி அரசுக்கு பல வழியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை குறிக்கும் வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது . இந்நிலையில் எடப்பாடி ஆதரவாளர்கள் முகத்தில் சிரிப்பே இல்லை என தெரிவித்த புகழேந்தி சற்று குஷியாதான் பேசுகிறார்.