புதுவை சொகுசு பங்களாவில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்எல் ஏக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதுமாக இருகின்றது.தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் ஒவ்வொரு எம் எல்ஏக்களின் பங்கும் ஆட்சி யாரிடம் செல்லப்போகிறது என்பதை தீர்மானிக்கும் விதமாக அமைந்துள்ளதுஇந்நிலையில், ஆரம்பம் முதலே சசிகலா குடும்பத்திற்கு ஆதரவு அளித்து வந்த பெருந்துறை சட்ட மன்ற உறுப்பினரும், முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்த தோப்பு என்.டி. வெங்கடாசலம் அதிரடியாக எடப்பாடி பழனிசாமியிடம் சரணடைந்தார். இது தினகரன் தரப்பிற்கு மிக பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது காரணம் தினகரனுக்கு படை தளபதிகளாக விளங்கிய எம்எல் ஏக்களில் பெரம்பூர் வெற்றிவேல் ஆண்டிப்பட்டி தங்கத்தமிழ்செல்வன், அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி பாப்பி ரெட்டி பட்டி பழனியப்பன் , பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் ஆவர். இந்த முக்கியமான பட்டியலிலிருந்து ஒரு விக்கெட் எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டதே இதற்கு காரணமாகும். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இன்று பேசிய தோப்பு வெங்கடாசலம் ,அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காகவே , தாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.இதே போன்று சில நாட்களுக்கு முன்பு தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் -உம் , இபிஎஸ்- க்கு ஆதரவு அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது