டிடிவி தினகரனுக்கு பித்தம் முத்திவிட்டது என்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் அவருக்கு எலுமிச்சை பழம் அனுப்புங்கள் எனவும் திருச்சி எம்.பி குமார் தெரிவித்துள்ளார். இரண்டு அணியாக இருந்த அதிமுக சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒன்றாக இணைந்தது. ஆனால் டிடிவி தினகரன் செயல்பாட்டால் மீண்டும் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. மேலும் எடப்ப்பாடி அணிக்கு நெருக்கமானவர்களை களை எடுப்பதாக கூறி டிடிவி தினகரன் ஒவ்வொருவரையாக கழக பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகிறார். அந்த வகையில், திருச்சி எம்.பி குமாரை இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொறுப்பில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு நடிகர் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த திருச்சி எம்.பி குமார், ஜெயலலிதா நியமித்த என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்தார். மேலும், டிடிவி தினகரனுக்கு பித்தம் முத்திவிட்டது என்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் அவருக்கு எலுமிச்சை பழம் அனுப்புங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.