முதல்வரால் முடியாததை ஒரே வாரத்தில் செய்து காட்டிய ஆளுநர்... தமிழிசையின் அடுத்த அதிரடி...!

By vinoth kumarFirst Published Feb 26, 2021, 4:04 PM IST
Highlights

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். 


புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை அந்த எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயித்து வருகின்றன.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இது வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ளது. ஏற்னகனவே சமையல் சிலிண்டர் விலை கடுமையாக அதிகரித்து உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் அதன் மீதான 2 சதவீதம் வாட் வரியை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறைத்துள்ளார். இதனையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.40 அளவில் குறைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கம், ராஜஸ்தான், அசாம், மேகலாயா ஆகிய மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை நீக்கியது குறிப்பிடத்தக்கது. 

click me!