வேலையில்லா திண்டாட்டத்தில் புதுச்சேரிக்கு முதலிடம். அமைச்சர்களுக்கே வேலை இல்லை. பங்கமாக கலாய்த்த எம்.பி.

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2021, 2:04 PM IST
Highlights

பிரதமர் மோடிக்கு இருந்த மிகப்பெரிய செல்வாக்கு சரிந்துகொண்டிருக்கிறது. அமைச்சரவையை மாற்றி அமைப்பதால் சரிவை சரி செய்துவிட முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தல், உத்திர பிரதேசம் மற்றும் பிற மாகாணங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வியை மறைமுக ஒப்புக்கொள்ளும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் பதவி மத்திய பாஜக பறிக்கப்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள மோடி தலைமையிலான அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், திடீரென அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அதில் குறிப்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து ஹர்ஸ்வர்தன் தனது பதவியை ராஜனாமா செய்துள்ளார். அவருக்கு மாற்றாக மன்சுக் மண்டாவியா அந்த பெறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இது குறித்து நேற்று புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அமைச்சரவையில் இதுவரை தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சந்தித்த தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரையும், தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ள நிலையில் கல்வித்துறை அமைச்சரையும் மாற்றியுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு இருந்த மிகப்பெரிய செல்வாக்கு சரிந்துகொண்டிருக்கிறது. அமைச்சரவையை மாற்றி அமைப்பதால் சரிவை சரி செய்துவிட முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தல், உத்திர பிரதேசம் மற்றும் பிற மாகாணங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். வேலையில்லா திண்டாட்டத்தில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. தற்போது அமைச்சர்களுக்கும் வேலையில்லா திண்டாட்டத்தை (இலாக்கா ஒதுக்காமல்) ஏற்படுத்தி உள்ளது. பதவி ஏற்ற பிறகும் எந்த துறையும் ஒதுக்காததால் அமைச்சர்கள் திண்டாடிகொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!