காங்கிரஸை கதறவிடும் நமச்சிவாயம்... உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார்..!

Published : Jan 27, 2021, 10:41 AM ISTUpdated : Feb 16, 2021, 10:47 AM IST
காங்கிரஸை கதறவிடும்  நமச்சிவாயம்... உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார்..!

சுருக்கம்

புதுச்சேரி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நமச்சிவாயம், இன்று காலை 11.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

புதுச்சேரி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நமச்சிவாயம், இன்று காலை 11.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீதான அதிருப்தியால் நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். அவருடன் ஊசுடு தனித் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவைச் சந்தித்து அளித்தனர். இதனையடுத்து இருவரின் ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் நேற்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதனையடுத்து, நமச்சிவாயம் இன்று காலை 11.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

பின்னர் புதுவைக்குத் திரும்பும் நமச்சிவாயம் வரும் 31-ம் தேதி ஏஎப்டி திடலில் நடைபெறும் பாஜக தேசியத் தலைவர் நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை இணைக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!