புதுச்சேரி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்.பி.யுமான வைத்திலிங்கம், புதுச்சேரி கந்தப்பமுதலியார் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வைத்திலிங்கம் எம்.பி.க்கு நேற்று முன்தினம் 71-வது பிறந்தநாள். தனது பிறந்த நாளில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அவர் சந்தித்தாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அவரது மனைவி சசிகலாவும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்.பி.யுமான வைத்திலிங்கம், புதுச்சேரி கந்தப்பமுதலியார் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வைத்திலிங்கம் எம்.பி.க்கு நேற்று முன்தினம் 71-வது பிறந்தநாள். தனது பிறந்த நாளில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அவர் சந்தித்தாக கூறப்படுகிறது.
undefined
இந்நிலையில் நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது வைத்திலிங்கம் எம்.பி.யின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஜிப்மர் மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 2 டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பிறந்தநாளுக்கு தன்னை சந்தித்து வாழ்த்துக்கூற வந்தவர்களில் யாரேனும் ஒருவர் மூலம் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.