முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே டிமிக்கி கொடுக்கும் நந்தகுமார்... ஜெகஜ்ஜால வேலைகளால் கலங்கித் தவிக்கும் அதிகாரிகள்!

By Thiraviaraj RMFirst Published Oct 7, 2021, 6:03 PM IST
Highlights

நந்தகுமாரை மேலே சொன்னது போல் பணியிடம், பதவி மாற்றம் செய்திருக்கலாம் இந்த தமிழ்நாட்டின் அரசு. ஆனால், இத்தனை பரபரப்புக்கும் மத்தியில் நந்தகுமாருக்கு டிரான்ஸ்ஃபரோ, சஸ்பெண்டோ கொடுக்கவில்லை. 

ஆட்சி மாறினாலும் சென்னை பெருமாநகராட்சியில் காட்சிகள் மாறவில்லை. மாறாக உள்ளிருக்கும் பொறியாளர்களையே மிரட்டிக் கொண்டு இருக்கிறார் என மாநகராட்சி தலை பொறியாளர் நந்தகுமார் மீது குற்றச்சாட்டு பொறியாய் பற்றி எரிகிறது.

 அதிமுக ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த பல அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் ஆகிக் கொடிருக்கின்றனர் அல்லது குற்றச்சாட்டுகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுக்கு பகிரங்கமாக ஆளான சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் மட்டும் டிரான்ஸ்ஃபரும், சஸ்பெண்டும் செய்யப்படாமல் அவர் சார்ந்த துறையை மிரட்டி வருகிறார் என்கிற குற்றச்சாட்டு குற்றால அருவி போல் பொங்கி வழிகிறது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரெய்டு நடந்தது. அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளிலும், சோதனை செய்யப்பட்டது. அப்போது சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து சென்னை பெருநகராட்சி அதிகாரிகள் தங்களது உள்ளக் குமுறலை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். ‘’திமுக ஆட்சிக்கு வந்ததும் எத்தனையோ நேர்மையான உயரதிகாரிகள் பணியிடமாற்றம், பதவி மாற்றம் செய்யப்பட்ட போதும் இந்த நந்தகுமார் மட்டும் அதே பணியிடத்தில் அமர்ந்து கோலோச்சி வருகிறார். இத்தனைக்கும், திமுக ஆட்சிக்கு வரும் முன்பே, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசிய இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது அமைச்சரவை சம்பந்தப்பட்டவர்கள், டெண்டர்கள் முறைகேடாக செயல்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது தமது ஆட்சி அமைந்தவுடன் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன்’’என கொங்கு கோட்டையில் மார்தட்டினார்.

அவர் சொன்னதுபோல் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து எஸ்.பி.வேலுமணி இல்லத்திலும் நெருங்கிய நட்பு வட்டாரங்களின் இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. ஆனால், வேலுமணி, எதிர்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். அவரது நட்புகள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களது விவகாரம் வேறு. தலைமை பொறியாளராக உயர்பதவியில் இருந்த, இருக்கிற நந்தகுமாரின் விவகாரம் வேறு. நந்தகுமாரை மேலே சொன்னது போல் பணியிடம், பதவி மாற்றம் செய்திருக்கலாம் இந்த தமிழ்நாட்டின் அரசு. ஆனால், இத்தனை பரபரப்புக்கும் மத்தியில் நந்தகுமாருக்கு டிரான்ஸ்ஃபரோ, சஸ்பெண்டோ கொடுக்கவில்லை. 

நந்தகுமார் அவரது தொடர்புகளை வைத்து இந்த பதவியை வைத்து அதற்கும் மேலாக கோலோச்சத் துடிக்கிறார்.  இதற்கெல்லாம் திமுக அரசு வளைந்து கொடுக்க காரணம் என்ன? எஸ்.பி.வேலுமணியும், அவரது சகோதரர் அன்பரசுவும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவர்களால் நியமிக்கப்பட்டுள்ள பொன் குமாரின் மைத்துனர் இந்த நந்தகுமாரை வைத்து திமுகவுடன் எஸ்.பி.வேலுமணி பேரம் பேசுகிறார்கள். எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசுக்கு நெருக்கமானவர் இந்த நந்தகுமார்.

 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் எஸ்.பி.வேலுமையின் சகோதரர் அன்பரசுவுக்காக பேருந்து நிறுத்த விளம்பரப்பலகைகளில் விளம்பரம் செய்யும் அனுமதியை வழங்கியுள்ளார் நந்தகுமார். அத்தோடு இல்லாமல், சென்னை பெருநகராட்சியில் பணியில் உள்ள பொறியாளர்கள் எனக்கெதிராக செயல்பட்டால் தான் ஓய்வு பெற்றுச் சென்றாலும் சும்மா விடமாட்டேன் என மிரட்டுகிறார். அடுத்து தனக்கு எதிராக, நேர்மையாக செயல்படும் அதிகாரிகளைப்பற்றி, தனியாக ஆபீஸ் போட்டு ஆட்களை வேலைக்கு வைத்து பெட்டிசன்களை அனுப்புகிறார்’’என்கிறார்கள் அங்கு பணிபுரியும் அப்பாவி அதிகாரிகள். இவர் மீது சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என ஏங்கிக் கிடக்கிறார்கள் சென்னை பெருமாநகராட்சி ஊழியர்கள்.  

click me!