புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு... முதல்வர் ரங்கசாமிக்கு மட்டும் எத்தனை துறைகள் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Jul 11, 2021, 8:17 PM IST
Highlights

புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது தொடர்பாக அரசிதழில் அச்சிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அடங்கிய பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதலமைச்சர் சவுந்தரராஜன் இன்று வழங்கினார். ஆளுநர் ஒப்புதலையடுத்து அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு சுகாதாரம், குடும்ப நலத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகம், அறநிலையத்துறை, பொது நிர்வாகம், தகவல் மற்றும் விளம்பரம், சுற்றுச்சூழல், துறைமுகம், அறிவியல்-தொழில்நுட்பம்  உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

நமச்சிவாயத்துக்கு உள்துறை, மின்வாரியம், தொழில் மற்றும் வணிகம், உயர்கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையும்,லட்சுமி நாராயணணுக்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து, மீன்வளம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர்-வேலைவாய்ப்பு, கலை மற்றும் வணிகத்துறையும்,ஜெயக்குமாருக்கு வேளாண், கால்நடை, வனம், சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சாய் ஜே.சரவணக்குமாருக்கு நுகர்பொருள், நகர கட்டமைப்பு வசதித்துறை, தீயணைப்பு, சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 

click me!