புதுச்சேரியில் காங்கிரஸ் கூடாராம் காலியாகிறது.. நாராயணசாமியின் தீவிர ஆதரவாளர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்.!

By vinoth kumarFirst Published Mar 8, 2021, 10:29 AM IST
Highlights

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஏ.கே.டி.ஆறுமுகம் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஏ.கே.டி.ஆறுமுகம் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

புதுச்சேரியில் இந்திராநகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த காங்கிரஸ் செயல் தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம். முதல்வர் நாராயணசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். இந்த முறையும் ரங்கசாமியை எதிர்த்து காங்கிரஸில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலரும் விலகி வந்த சூழலில் ஏ.கே.டி. ஆறுமுகம் சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு நேற்று இரவு ஏ.கே.டி. ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் சென்று ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில்;- புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம், காங்கிரஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வேறு ஒரு கட்சிக்கு மாறும் முயற்சியை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!