பொதுமக்களே உஷார்.. தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் ஆப்பு.. காவல் துறை கடும் எச்சரிக்கை..

By Ezhilarasan BabuFirst Published May 14, 2021, 8:41 AM IST
Highlights

எனவே தொற்று பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தால், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது அரசு. அதில் கலந்துகொண்ட பல்வேறு கட்சியினர், ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். 

ஊரடங்கு தீவிரப்படுத்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ஊரடங்கு மீறி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில தகவல்களை அரசு அறிவித்துள்ள நிலையில், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் சிலர் விதி மீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே தொற்று பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தால், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது அரசு. அதில் கலந்துகொண்ட பல்வேறு கட்சியினர், ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். எனவே ஊரடங்கை கடுமையாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து தேவையின்றி வெளியில் சுற்றும் வாகனங்கள் மற்றும் நடமாடுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் காவல்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில் , கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு, 10-5-2021 முதல், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும்,  கொரனோ பரவாமல் இருக்க முக கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளைக் அவ்வப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

10-5-2021 முதல் இன்று வரை தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும், காவல்துறையினர் கடந்த 4 நாட்களாக ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர், அறிவுரைகளை பொதுமக்கள் சிலர் சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றுவதால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நாளை 14-5-2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றிவரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி, தீவிரமாக கொரோனா பரவி வரும் இக்காலகட்டத்தில், சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதில் இருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்துக் கொள்ளும்படி தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!