குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்... திமுக ஐடி விங்க் என்ன ஆகும்?

By Selva KathirFirst Published Dec 15, 2020, 12:06 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வியூக வகுப்பாளராக சுனில் இருந்த போது அமைத்துக் கொடுத்த கட்டமைப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருவதாகவும் புதிதாக எந்த அப்டேட்டும் செய்யப்படுவதில்லை என்று முனுமுனுப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வியூக வகுப்பாளராக சுனில் இருந்த போது அமைத்துக் கொடுத்த கட்டமைப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருவதாகவும் புதிதாக எந்த அப்டேட்டும் செய்யப்படுவதில்லை என்று முனுமுனுப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் வலுவான தகவல் தொழில்நுட்ப அணியை கொண்டுள்ள கட்சி என்றால் அது திமுக தான். பிரதமர் மோடியாக இருந்தாலும் சரி நடிகர் ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிரான ட்ரெண்டிங்கை ட்விட்டர், பேஸ்புக், யூட்யூபில் கட்சிதமாக கரை சேர்க்கும் பணியில் திமுக ஐடி விங்க் மிக எளிதாக மேற்கொள்ளும். இதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் முதல் தற்போது உதயநிதி ஸ்டாலின் வரை அவர்கள் இமேஜ் மற்றும் செயல்பாடுகளை தூக்கிப் பிடிப்பதிலும் திமுக ஐடி விங்க் கில்லியாக செயல்பட்டு வருகிறது.

இதனால் சமூக வலைதளங்களை பொறுத்தவரை திமுகவின் ஆதிக்கம் தான் அதிகம். அந்த வகையில் திமுக ஐடி விங்க் செயலாளராக இருப்பவர் மதுரையை சேர்ந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன். இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்திய காலம் முதலே அவர் அதற்கு செயலாளராக இருந்து வருகிறார். தவிர அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளருக்கு பிறகு தனி அறையும் முதன் முதலில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனுக்குத்தான் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதிலும்  திமுக தலைவர் கலைஞர் இருக்கும் போதே இது சாத்தியமானது.

ஆனால் பழனிவேல் தியாகராஜன் வேறு ஒருவர் போட்ட ரோட்டில் எளிதாக வண்டியை ஓட்டி வந்தார். திமுகவின் வியூக வகுப்பாளராக சுனில் பொறுப்பேற்ற பிறகு தான் ஐடி விங்க் செயல்பாடுகள் தீவிரமாகின. கிளைக்கழகம் வரை ஐடி விங்க்கிற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அத்தோடு மாஸ் அளவில் திமுகவின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் கொண்டு செல்வதற்கான செயல் திட்டத்தையும் சுனில் தான் கற்றுக் கொடுத்தார். இதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு பழனிவேல் ராஜன் திமுக ஐடி விங்கை வழிநடத்தி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் திமுக பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோரை வியூக வகுப்பாளராக ஒப்பந்தம் செய்தது. இதனை அடுத்து சுனில் திமுகவிடம் இருந்து விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைந்து தற்போது பணியாற்றி வருகிறது. ஆனால் திமுக ஐடி விங்கை பொறுத்தவரை சுனில் இருந்த போது எப்படி செயல்பட்டதோ தற்போதும் அதே மாதிரி தான் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் திமுக ஐடி விங்கின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை.

இதனால் எந்த விஷயத்தை திமுக எப்படி அணுகும், எப்படி டிரெண்ட் செய்யும் என்பதை சுனில் டீம் முன்கூட்டியே யூகித்து அதற்கு பதிலடியை ஆரம்பித்துவிடுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் அதிமுகவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. திமுக எது செய்தாலும் பேக் பயர் ஆகும் அளவிற்கு சுனில் டீம் காய் நகர்த்தி வருகிறது. இதற்கு காரணம் திமுகவின் ஐடி விங்க் செயலாளர் பழனிவேல் தியாகராஜன் தனது செயல்பாடுகளை அப்டேட் செய்து கொள்ளாதது தான் என்கிறார்கள். மேலும் பழையை மெத்தடில் சமூக வலைதளங்களில் திமுக ஐடி விங்க் செயல்பட்டு வந்தால் அதிமுகவை எதிர்கொள்வது கடினம் என்று அக்கட்சியின் ஐடி விங்க் நிர்வாகிகளே முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர்.

மேலும் ட்விட்டர், பேஸ்புக்கில் திமுக போடும் அனைத்து யார்க்கர்களையும் தற்போதே அதிமுக சிக்சருக்கு விரட்ட ஆரம்பித்துள்ளது. எலெக்சன் டைமில் இது மேலும் தீவிரம் ஆகும் என்கிறார்கள். அதோடு பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீமுக்கும் – பழனிவேல் ராஜனின் ஐடி விங்கிற்கும் கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக சொல்கிறார்கள். ஒருவர் காலை மற்றொருவர் எப்படி வாருவது என நேரம் பார்த்து காத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் திமுகவின் ஐடி விங்கில் பணியாற்றிய பலரும் தற்போது எடப்பாடியுடன் இருக்கும் சுனில் டீமை நோக்கி தாவ ஆரம்பித்துள்ளனர். எனவே ஸ்டாலின் சுதாகரித்துக் கொண்டு பழனிவேல் ராஜனின் செயல்பாடுகளை கண்காணிக்கவில்லை என்றால் தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் அதிமுகவின் கை ஓங்கிவிடும் என்கிறார்கள்.

click me!