திமுகவில் இணைந்தார் பி.டி.அரசகுமார்... அதிர்ச்சியில் பாஜக நிர்வாகிகள்..!

Published : Dec 05, 2019, 11:18 AM IST
திமுகவில் இணைந்தார் பி.டி.அரசகுமார்... அதிர்ச்சியில் பாஜக நிர்வாகிகள்..!

சுருக்கம்

மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

தமிழக பா.ஜ.க-வின் அடுத்த தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பட்டியலில் பி.டி.அரசகுமார் பெயரும் இடம் பெற்று இருந்தது. பாஜக மாநிலத் துணைத்தலைவராக இருந்த அவர் கடந்த 1ம் தேதி புதுக்கோட்டையில் நடந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொண்டார். அங்கு பேசுகையில், `தமிழக முதல்வராக விரைவில் ஸ்டாலின் பொறுப்பேற்பார்' என்று ஸ்டாலின் முன்னிலையிலேயே பேசியது பா.ஜ.க வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழக பா.ஜ.க-வில் குரல் எழுந்தது. இதனையடுத்து பாஜக தேசிய தலைமைக்கு பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பாஜக நிர்வாகிகள் கடிதம் அனுப்பினர். அதில் தேசிய தலைமை பதில் அளிக்கும் வரை பி.டி.அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் அவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி