
தன்னுடன் சேர்ந்து இரவெல்லாம் ஆபாச படம் பார்க்க மறுத்த மனைவியை கணவன் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அலிப்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சமீபகாலமாக இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் மொபைல் போனில் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதில் அடங்கும். சிலர் அதுபோன்ற வீடியோக்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் அவலங்களும் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் டெல்லி அலிப்பூர் பகுதியில் இரவெல்லாம் ஆபாச படம் பார்க்கும் பழக்கம்முடைய கணவன் மனைவியையும் அப்படத்தை பார்க்கச் சொல்லி துன்புறுத்தி கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு டெல்லி அலிப்பூர் பகுதியில் பாபு ஜெகஜீவன்ராம் மருத்துவமனையில் ஒரு பெண் படுகாயம் அடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தப் பெண் விவரித்தார். அந்தப் பெண்ணுக்கு 49 வயது ஆகிறது என்றும் தனக்கு 1993 இல் திருமணம் நடந்ததாகவும் கூறினார். திருமணமானது முதல் தனது கணவன் தன்னையும் தனது மகளையும் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கணவன் காயப்படுத்தி வந்ததாகவும் கூறினார். தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு பெண்ணைத் தத்து எடுத்து வளர்த்து வந்த நிலையில் அந்த மகளை கணவர் சரமாரியாக அடித்து துன்புறுத்துவதை கணவன் வழக்கமாகக் கொண்டு இருந்ததாகவும் கூறினார். இதனால் தனது மகளுக்கு 20 வயதான நிலையில் திருமணம் செய்து வைத்து விட்டதாகவும் அந்தப் பெண் கூறினார்.
இந்நிலையில் தனது கணவன் போனில் ஆபாச படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் அப்போது அடிக்கடி தனக்கும் அதை காட்ட முயன்று வந்தார் என்றும் ஆனால் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது என்றும், அப்போது தலைமுடியை இழுத்து சரமாரியாக அடித்து உதைத்த கணவன் தன் கழுத்தை நெறித்ததுடன் அருகில் இருந்த கத்தியை எடுத்து குத்தியதாகவும் அப்போது தனது அதன் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து பார்த்தனர் என்றும், அதற்குள் தனது கணவர் தப்பி ஓடி விட்டதாகவும் அந்தப் பெண் கூறினார். தலையில் படுகாயத்துடன் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மனைவியை ஆபாச படம் பார்க்க வற்புறுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அலிபூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.