
இந்தியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலை பிரபல நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. இதில் நாட்டின் செல்வாக்கு மிக்க 100 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் செல்வாக்கு மிக்க நபர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். நாடு முழுக்க வெளியாகி வரும் முன்னணி ஆங்கில நாளிதழ் இந்தியாவின் 100 செல்வாக்கு மிக்க நபர்கள் தலைப்பில் பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
சமீபத்தில் கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம், விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்சினைகளால் பிரதமர் மோடியின் இமேஜ் சரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின்:
நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 23 ஆவது இடத்தில் உள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி, அதன்பின் தொடர் வெற்றி ஈட்டியதன் மூலம் மு.க. ஸ்டாலின் இந்த இடத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாப் 5:
பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளனர். நான்காவது இடத்தில் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா, ஐந்தாவது இடத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.
இந்திய டெலிகாம் சந்தையில் பல்வேரு முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருப்பது, ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை நிறுவனத்திற்கு ஈட்டி தந்தது என பல்வேறு நடவடிக்கைகளில் முகேஷ் அம்பானி தொடர்ந்து அசத்தி வந்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்:
கடந்த ஆண்டின் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில் 13 ஆவது இடத்தில் இருந்த யோகி ஆதித்யநாத் இந்த ஆண்டு 6 ஆவது இடத்தில் உள்ளார். 2022 உத்திர பிரதேச மாநில தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இருப்பதற்கு பிரதமர் மோடி - யோகி ஆதித்யநாத் வியூகங்களே முக்கிய காரணம் எனலாம். யோகி ஆதித்யநாத் திட்டங்களால் அம்மாநிலத்தில் பா.ஜ.க. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து இருக்கிறது.
டாப் 10:
இந்தியாவின் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலின் 7 ஆவது இடத்தில் கவுதம் அதானி, 8 ஆவது இடத்தில் அஜித் நோவல், 9 ஆவது இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், 10 ஆவது இடத்தில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளனர். அதிவேகமாக வளர்ந்து வரும் உலகின் ஆறாவது பொருளாதாரம் கொண்ட நாட்டின் நிதித் துறையை ஆளும் நிர்மலா சீதாராமன் அரசு மேற்கொண்டு வரும் முக்கியத் திட்டங்களை செயல்படுத்த உதவும் என்ஜின் அறையை நிர்வகிக்கிறார்.