கோடியில் செலவு செய்த கவுன்சிலர்ஸ்.. வசூல் வேட்டையை எப்படி தடுக்க போறீங்க.. ஸ்டாலினை திணறடிக்கும் ஆம் ஆத்மி.

Published : Apr 01, 2022, 03:13 PM IST
கோடியில் செலவு செய்த கவுன்சிலர்ஸ்.. வசூல் வேட்டையை எப்படி தடுக்க போறீங்க.. ஸ்டாலினை திணறடிக்கும் ஆம் ஆத்மி.

சுருக்கம்

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகபடியான வேட்பாளர்கள் அதிக செலவு செய்து கவுன்சிலராக வந்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் பதவி சம்பளம் பெறக்கூடிய பதவி அல்ல, இதற்கு அவர்கள் இவ்வளவு செலவு செய்தது முதலீடுதானே தவிர சேவை அல்ல என்றார்.

கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்கள், அப்பணத்தை சம்பாதிக்கவே முயற்சிப்பார்கள் இப்படிப்பட்ட நிலையில் ஊழலை எப்படி முதலமைச்சர் ஸ்டாலின் தடுக்கமுடியும் என  ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் கேள்வி எழுப்பி உள்ளார். உள்ளாட்சி மன்ற தேர்தல் பதவி சம்பளம் பெறக் கூடிய பதவிகள் அல்ல, ஆனால் அந்த பதவிகளுக்கு இவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள் என்றால், அது முதலீடுதானே ஒழிய சேவை இல்லை என்றார். இப்படிப்பட்ட நிலையில் முதல்வரும் ஊழலை ஒழிப்பார் என்பதில் ஐயம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  அது மக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்ற விமர்சனம் திமுகவுக்கு எதிராக உள்ளது. அதே நேரத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றிருப்பதுடன் 21 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளையும் திமுகவினர் அலங்கரித்து உள்ளனர். இந்நிலையில் கவுன்சிலராக பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது ஒரு சில பெண் கவுன்சிலர்களின் கணவன்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதேபோல் சென்னையை சேர்ந்த பெண் கவுன்சிலரின் கணவர் ஒருவர் போலீசை நடுரோட்டில் வைத்து ஆபாசமாக பேசும் வீடியோவும் வெளியாகவுள்ளது. பெண் கவுன்சிலர்கள் கணவன்மார்கள் அவர்களின் பதவிகளை தவறாக துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பலரும் திமுக கவுன்சிலர் நடவடிக்கைகளை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத்தலைவர் வசீகரன் தமிழகத்தில் திராணியற்ற பாஜக தலைவர் இருக்கிறார், உண்மையிலேயே பாஜகவுக்குதான் திராணி இல்லை, இந்தியாவில் இனி மோடி கிடையாது, குஜராத் மாடல் இனி இல்லை, டெல்லி மாடல் தான் இனி இந்தியாவில் இருக்கும் என்றார்.

பஞ்சாபை தொடர்ந்து ஆம் ஆத்மி குஜராத்தில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும், தமிழகத்தில் யார் ஊழல் செய்தாலும் அதை ஆம் ஆத்மி தட்டிக்கேட்கும். தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் கட்சி தான் பாஜக. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய மாநில உறவு அடிப்படையில் தமிழக பிரச்சினைகளுக்காக கோரிக்கை வைக்கிறார். இதே நேரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேச அண்ணாமலைக்கு யோக்கியதை இல்லை. இந்நிலையில் அதை குறைக்க வேண்டும் என்றாதன் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருக்கிறார். மோடியை நம்பி யாரும் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது என  அவர் விமர்சித்தார். ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது, கட்சி தொடங்கிய போது வளரவே வளராது என விமர்சித்தவர்கள் இந்தியாவின் பெரிய அரசியல் வியூககர் கெஜ்ரிவால் என பாராட்டி வருகின்றனர். 

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகபடியான வேட்பாளர்கள் அதிக செலவு செய்து கவுன்சிலராக வந்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் பதவி சம்பளம் பெறக்கூடிய பதவி அல்ல, இதற்கு அவர்கள் இவ்வளவு செலவு செய்தது முதலீடுதானே தவிர சேவை அல்ல என்றார். எனவே  கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வென்று வந்துள்ள கவுன்சிலர்கள் அதை சம்பாதிக்கவே பார்ப்பார்கள் இந்நிலையில் ஸ்டாலின் தமிழகத்தில் ஊழலை  எப்படி ஒழிப்பார் என்ற ஐயம் எழுகிறது என வசீகரன் விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்யும் நோக்கத்தோடு பாஜக அரசு நேரடியாக இறங்கி விட்டது. டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக, காவல்துறையின் உதவியுடன் ரவுடி கும்பலை பாஜக எம்பி தேஜஸ்ரீ தலைமையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் இல்லத்திற்கு அனுப்பி வன்முறையில் ஈடுபட்டுள்ளமு என குற்றம் சாட்டினார். டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அடாவடி, சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது என்றும் டெல்லியில் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு